சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டித் தொழிற்சாலையில் ஐசிஎப் இந்திய திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பழகுநர் (அப்ரண்டீசிப்) பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 782 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
பெரம்பூர் இணைப்பு பெட்டித் தொழிற்சாலையில் இயந்திரவியல், மின்னியல், மருத்துவ பரிசோதனை தொழில் நுப்பவியலாளர்கள், மற்றும் புரோக்கிராமிங் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் உதவியாளர் ஆகிய தொழில்களில் உள்ள 2023-2024 ஆம் ஆண்டுக்கான 782 காலியிடங்களில் (252 புதியவர்கள், 530 ஐடிஐ முடித்தவர்கள்) சேர்த்து தொழில்பழகுநர் பயிற்சி பெறுவதற்காக அன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: 10, 12 வகுப்பு முடித்தவர்கள்; ஐடிஐ படிப்பு முடித்தவர்கள் இந்த தொழில்பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, ஐடிஐ டிரேடுகள்: ELECTRICIAN, FITTER, MACHINIST, PAINTER , WELDER, MLT -Radiology, MLT-Pathology, PASAA . Freshers: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பாஸ் ஆனவர்கள் இந்த தொழில்பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6,000, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000 என்று பழகுநர் காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.

முன் தகுதி: தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டுமே இந்த தொழில் பழகுநர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். அதுவும் அவர்கள், அவர்கள் சார்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். அதாவது, தொழில்பழகுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பத்தாரர்கள் வயது 21 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
டிரேடு வாரியான காலியிடங்கள், தகுதி மற்றும் விரிவான வழிமுறைகளுக்கு இணையதளமான https://pb.icf.gov.in/act/ இல் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் விண்ணப்பத்தை 30.06.2023 வரை சமர்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 044-26147708 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.25 மணி வரையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்கலாம்.

