spot_img
More
    முகப்புசினிமா’’திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்..!’’ வைரமுத்து-க்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்

    ’’திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்..!’’ வைரமுத்து-க்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்

    கவிப்பேரரசு வைரமுத்து-க்கு இன்று 70வது பிறந்தநாள். இதைக் கொண்டாடும் கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை பெசன்ட்நகரில் உள்ள வைரமுத்து இல்லத்திற்கு இன்று காலை வந்தார். பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

    தமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக திகழும் கவிஞர் வைரமுத்து பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சிறந்த திரைப்பாடலுக்கு 7 தேசிய விருது, சாகித்ய அகாடமி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். 

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments