spot_img
More
    முகப்புசெய்திகள்"தலித் மக்கள் மீது தாக்குதல் - குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!" சு.வெங்கடேசன் எம்.பி.,

    “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி.,

    "மதுரை - திருமோகூரில் கோயில் திருவிழாவின் போது ஏற்ப்பட்ட பிரச்சனையையொட்டி தலித் மக்களின் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்ட அறிக்கையில், “மதுரை – திருமோகூரில் கோயில் திருவிழாவின் போது ஏற்ப்பட்ட பிரச்சனையையொட்டி தலித் மக்களின் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும.

    சேதமடைந்த சொத்துக்களுக்கு உரிய நிவாரனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட செல்வகுமார் (32), மணிமுத்து (32), குமார் (39), பழனிக்குமார் (35) ஆகியோர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை சி பி எம் மாவட்ட செயலாளர் மா. கனேசன், தீ.ஒ. முன்னனி மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர்கள் செ.முத்துராணி (புறநகர்) ம.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம், மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ்கண்ணா, சரவணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பபினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்” என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments