spot_img
More
    முகப்புசினிமா''தனது எதிரிகளைத் தொடர்ந்து தீர்த்துக்கட்டும் தாவூதின் வாழ்க்கை..!'' மொத்தம் பத்து எபிசோட்கள்

    ”தனது எதிரிகளைத் தொடர்ந்து தீர்த்துக்கட்டும் தாவூதின் வாழ்க்கை..!” மொத்தம் பத்து எபிசோட்கள்

    மும்பையின் நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆரம்ப கால கதையைச் சொல்லும் தொடராக வெளிவந்திருக்கிறது Bambai Meri Jaan. மும்பை நிழலுலகம் குறித்த பல நூல்களை எழுதியுள்ள எஸ். ஹுசைன் சைதியின் Dongra to Dubai புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தொடர் இது.

    1960-களில் இருந்து 1980-களின் மத்தி வரையிலான பம்பாயில் தாவூத்தின் எழுச்சியை விவரிக்கும் கதை இது. பம்பாய் நிழலுலகின் ஆரம்ப கால தாதாவான ஹாஜி மஸ்தானின் கதையைச் சொல்வதுபோலத் துவங்குகிறது கதை.
    பிறகு, வரதராஜு முதலியார், பதான் ஆகியோரின் கதையைச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தாவூதின் வாழ்க்கைக்குள் நுழைகிறது.

    தனது எதிரிகளைத் தொடர்ந்து தீர்த்துக்கட்டும் தாவூத், பம்பாய் நிழலுலகின் முடிசூடா மன்னனாக எப்படி எழுந்தார் என்பதை சற்று கற்பனை கலந்து சொல்லுகிறது இந்தக் கதை.

    தாவூதின் வாழ்க்கை, செயல்பாடுகள் ஆகியவை சரியா, தவறா என்பதான விவாதத்திற்குள் இந்தத் தொடர் செல்லவில்லை. மாறாக, மும்பை நிழலுலகம் என்பது வெறுமனே தாதாக்களால் மட்டும் ஆனதல்ல; அரசியல்வாதிகள், காவல்துறையினர் ஆகியோரும் இந்த நிழல் உலகின் ஒரு அங்கம் என்பதையும் காட்டுகிறது இந்தத் தொடர்.

    இந்தத் தொடரின் மிக முக்கியமான பலம், இதன் நடிகர்கள். கே கே மேனன், அவினாஷ் திவாரி, நிவேதா பட்டாச்சார்யா, அமைரா தஸ்தர், சௌரப் சச்தேவா போன்ற அட்டகாசமான நடிகர்களை சரியான பாத்திரத்திற்கு தேர்வுசெய்ததிலேயே இந்தத் தொடருக்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது.

    குறிப்பாக, தவறுக்கும் சரிக்கும் நடுவில் தொடர்ந்து தடுமாறும் இஸ்மாயிலின் பாத்தரத்தில் நடித்திருக்கும் கே கே மேனனும் ஹாஜி மஸ்தானாக வரும் சௌரப் சச்தேவாவும் ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறார்கள். சௌரப் சச்தேவா வரும் காட்சிகளில், அவர் எதுவும் பேசவே வேண்டாம், முக பாவங்களே போதுமானதாக இருக்கிறது.

    அது தவிர, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை மிகச் சிறப்பான தரத்தில் அமைந்திருப்பது தொடரை வேறு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது. தமிழ் டப்பிங்கும் சிறப்பாக இருக்கிறது. சில தருணங்களில் இந்தி, உருது வார்த்தைகளையே பயன்படுத்தியிருப்பது தொடரின் இயல்புத்தன்மையை கூட்டுகிறது.

    அமெசான் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் மொத்தம் பத்து எபிசோட்கள். அடுத்தடுத்த சீஸன்களும் வரும்போலிருக்கிறது. கண்டிப்பாக பார்க்கக்கூடிய தொடர் இது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments