spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்’’ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ்..!’’

    ’’ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ்..!’’

    ஜெயிலர் படத்தின் முதல் பாடலான "காவாலா" வரும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

    வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

    இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாகவுள்ளா நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தப் படத்தின் முதல் பாடல் நான்கு நாட்களில் வெளியாகும் என அனிருத் அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் அறிவித்திருந்தார். எப்பொழுதும் நெல்சன் படங்களில் பாடல்கள் வெளியாகும்போது அதற்கான புரமோ வெளியாவது வழக்கம்.

    ஜெயிலர் படத்தின் பாடல் புரமோவுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் அனிருத்தும், நெல்சனும் கிண்டலாக பேசிக்கொள்ளும் ப்ரோமோவில் பாடலாசிரியரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்த ப்ரோமோவில் காவாலா என்ற முதல் பாடல் வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள அந்த பாடலை படத்தில் தமன்னா பாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடல் “காவாலா” ரிலீஸ் ஆகிறது என்று சன் பிச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த பாடல் போஸ்டர்  நேற்று மாலை வெளியானது. அதில் தமன்னா இடம் பெற்றுள்ளார். இந்த படமே, அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments