spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி 797 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு

    ’’ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி 797 காலிப்பணியிடம்..!’’ டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு

    மத்திய அரசின் புலனாய்வுப் பணியகத்தில் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி வேலையில் 797 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிப்ளமோ இன்ஜினியரிங், பட்டப்படிப்பு முடித்துள்ளோர் ஜுன் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய அரசின் உள்த்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புலனாய்வுப் பணியகத்தில் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி வேலையில் 797 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    பதவி: ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி (JUNIOR INTELLIGENCE OFFICER GRADE – II)

    சம்பள விகிதம் : Pay scale Level 4 (Rs.25,500-81,100)

    காலிப்பணியிடம்: பொது-325, பொருளாதரத்தில் பின்தங்கியோர்-79. இதர பிற்படுத்தப்பட்டோர் – 215. ஆதிதிராவிடர் – 119. பழங்குடியினர் 59. மொத்தம் 797.

    கல்வித்தகுதி:
    1.டிப்ளமோ இன்ஜினியரிங் – Electronics or Electronics & Tele-communication or Electronics & Communication or Electrical & Electronics or Information Technology or Computer Science or Computer Engineering or Computer Applications from a Government recognized University/Institute அல்லது
    2.பட்டப்படிப்பு: Electronics or Computer Science or Physics or Mathematics அல்லது
    3.பட்டப்படிப்பு: Computer Applications

    வயது வரம்பு: வயது வரம்பு 18 வயதில் இருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர்.

    தேர்வு முறை:

    நிலை 1: ஆன்லைன் வழியில் கொள்குறி வகையில் 100 கேள்விகள் இடம்பெறும். அதில் பொது மன திறன் (General Mental Ability) பகுதியில் 25 வினாக்கள். 75 வினாக்கள் அவரவர் பாடங்களில் இருந்து கேட்க்கப்படும். சரியான ஓவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் உண்டு. தவறான விடைக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும்.
    நிலை 2 : திறன் தேர்வு: புலனாய்வு பணியகம் தொடர்பாக திறன் தேர்வு உண்டு. அதற்கு 30 மதிப்பெண்.
    நிலை 3 : நேர்முகத்தேர்வு – 20 மதிப்பெண்.

    தேர்வுக் கட்டனம் : தேர்வு கட்டனம் ரூ.50 மட்டும் பெண்களுக்கு செலுத்தினால் போதும். ஆனால், அனைத்து ஆண் தேர்வர்களும் தேர்வுக் கட்டணம் ரூ.50 மற்றும் ஆட்சேர்ப்பு செயலாக்க கட்டணம் ரூ. 450 என்று மொத்தம் ரூ.500 இத்தேர்வு எழுத செலுத்த வேண்டும்.

    விண்ணப்பம் : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்வித்தகுதியும் மற்ற தகுதிகளும் இருப்பின் ஜுன் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் www.mha.gov.in or www.ncs.gov.in விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்த ஜூன் 27-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments