spot_img
More
    முகப்புசெய்திகள்’’சலுகை விலையில் CAT இயந்திரங்கள்..!’’ வாடிக்கையாளர் சந்திப்பில் கத்திப்பாரா ஜெ.விவேக்

    ’’சலுகை விலையில் CAT இயந்திரங்கள்..!’’ வாடிக்கையாளர் சந்திப்பில் கத்திப்பாரா ஜெ.விவேக்

    சென்னை மீனப்பாக்கத்தில் டிரைடென்ட் நட்சத்திர ஓட்டலில் CAT நிறுவனம் 7-10-2023 -அன்று வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது. அதில், தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். CATERPILLER INC நிறுவனத்தின் உலகளாவிய மூத்த துணைத் தலைவர் ஓட்டோ ப்ரீட்ச்வெர்ட் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜெ.விவேக், மூத்ததலைவர் சைதை எம்.எஸ்.மணி, சங்கத்தின் பொருளாளர் ராஜசேகரன், பொதுச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த வாடிக்கையாளர் சந்திப்பு குறித்து சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜெ.விவேக் கூறியதாவது:

    ‘கேட்டபில்லர் நிறுவனத்தின் வாகனங்கள் குறித்து விளக்கும் வகையில் இந்த வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. எங்களின் தேவை என்ன என்பதை கேட்டறிந்தனர். இப்போது இருக்கும் வாகனங்களில் செய்ய வேண்டிய தொழில் நுட்ப முன்னேற்றங்கள், புது எந்திரங்கள், உதிரி பாகங்கள், மெட்ரோ ரெயில் வேலைக்கு தேவையான நவீன எந்திரங்கள் குறித்து பேசப்பட்டது. எங்கள் சங்கத்தை பொறுத்த வரையில் கேட்டபில்லர் வாகனங்களை எங்கள் உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வாங்குவது குறித்து பேசி இருக்கிறோம். அதுபோல, வாகன உதிரிப்பாகங்களையும் சலுகை விலையில் தரக் கேட்டுள்ளோம். மேலும், உதிரி பாகங்களை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இது நல்ல சந்திப்பாக அமைந்தது’’.

    இவ்வாறு கத்திப்பாரா ஜெ.விவேக் கூறினார்.

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments