தமிழ்நாடு அரசு நடத்தும் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி DCM (R) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகளில் வேலை பார்க்க இந்த படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma In Cooperative Management)
தொடங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 13.09.2023
முதல் 22.09.2023 வரை www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் இருந்து
பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை விடுதலின்றி அனைத்து கலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணமாக ரூ. 100/- இணையதளம் மூலம் செலுத்தி சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி ஆகும் மற்றும் 01.08.2023
அன்று 17 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
இருபாலருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு நிர்ணயித்துள்ள
இடஒதுக்கீட்டின்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஒராண்டு 2 பருவ முறைகளாக ( முதல் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள் + இரண்டாம் பருவம் / 6 மாதம் / 5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ. 18750/- ஆகும்.
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகளில் வேலை பார்க்க இந்த படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப்படிப்பு அரசு வேலைவாய்ப்பை அள்ளித்தரும் படிப்பு என்பதை மறந்துவிட வேண்டாம்.

