தமிழ்நாடு அரசின் கட்டுபாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் என மொத்தம் 2257பணி இடங்களை நிரந்தர வேலை மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலம் இந்த பணி நியமனம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்? என்னென்ன படிக்க வேண்டும்? என்பது குறித்து ஸ்டெப் பை ஸ்டெப் ஆக இந்த விடியோவில் பார்க்கலாம்.
’’எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு தரத்துடனும் கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் ஆகிய பாடங்களை உள்ளடக்கி இருக்கும்’’ என்று கூட்டுறவுத் துறை ஆள்சேர்ப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பாடத்திட்டம் என்ன என்பதை முதலில் பார்த்து விட வேண்டும்.
அதாவது எழுத்துத் தேர்வு பாடத்தில், ’’கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல்’’ ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடங்கள் எல்லாம், நீங்கள் கூட்டுறவு மேலாண்மை படிப்பில் படித்ததுதான். அதை திரும்பவும் படிக்கவும். இதற்காக, மார்க்கெட்டுகளில் கிடைக்கும் கைடுகளை வாங்கி நேரத்தை வீனடிக்க வேண்டாம். ’’கணினிப் பயன்பாடு’’ என்ற பாடத்திற்கு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு கணினி என்ற கம்யூட்டர் பாடப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். ஒரு முறைக்கு இரு முறைபடித்தாலே கம்யூட்டர் பாடத்தை முடித்துவிடலாம்.
’’பொது அறிவுப் பகுதி’’ என்பது டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குருப் 4 தேர்வுக்கு உள்ள பாடத்திட்டமே கூட்டுறவு போட்டித்தேர்வுக்கும் தரப்பட்டுள்ளது. எனவே, ஸ்கூல் பிள்ளைகள் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள ’தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு’ புத்தகங்களை மட்டுமே வாங்கி படிக்கவும். இதை வாங்க போதிய நேரமும் வாய்ப்பும் இல்லை என்றால் MadrasMurasu யூடியூப் சேனலில் பொது அறிவு பகுதிக்கான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை பார்க்கவும். தேவைபப்டுவோர் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். https://www.youtube.com/@MadrasMurasu க்கிளிக் செய்யவும்
கூட்டுறவுத்துறை எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் இருக்கும். அதாவது Objective Type முறையில் இருக்கும். ஒரு வினாவுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மிகச்சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் கேள்வித்தாளில் மொத்தம் 200 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். மொத்த மதிப்பெண் 170 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற அடிப்படையில் இருக்கும். அதாவது 170 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும் 30 மதிப்பெண் நேர்முகத்தேர்வுக்கும் வழங்கப்படுகிறது.
விண்ணபத்தாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத்தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இடஒதுக்கீடு, இன சுழற்சி முறை, விண்ணப்பத்தாரர் பணிபுரிய விரும்பம் தெரிவித்த சங்கம் ஆகியவற்றின் மூலம் பணி நியமனம் நடைபெறும்.
தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள https://drbslm.in/doc_pdf/Syllabus.pdf என்ற தளத்தை பார்க்கவும்

