கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலை நீடித்தது.
ஆனால், காலை 10 மணி அளவில் காங்கிரஸ் முன்னேறியது. காங்கிரஸ் கட்சி 116 இடங்களிலும் பாஜக 77 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மத சார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களிலும் மற்றவர்கள் 5 இடங்களிலும் முன்னிலை வகித்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 சீட் வேண்டும்.




