Home செய்திகள் ’’மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை..! திராவிட மாடல் பரிசாக கி.வீரமணி கேட்கிறார்

’’மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை..! திராவிட மாடல் பரிசாக கி.வீரமணி கேட்கிறார்

0
’’மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை..!   திராவிட மாடல் பரிசாக கி.வீரமணி கேட்கிறார்

திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிஅறிக்கை வருமாறு:

‘’மாந்திரிகம் என்ற பெயரில் பெண்களிடம் நகை பறித்தல், பில்லி, சூன்யம் எடுக்கும் பெயரால் பணமோசடி, நகைக் கொள்ளைகள், பெண்களிடம் வன்கொடுமை -பாலியல் சீண்டல்கள், சில இடங்களில் நரபலி – தமிழ் நாட்டின் சில மாவட்டங்களில் இவை போன்று நடந்தது கண்டறியப்பட்டுள்ளது வேதனை தருவதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு – ‘‘இந்திய குடிமக்களி டையே அறிவியல் மனப் பாங்கை வளர்த்து, கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பது, சீர்திருத்தம், மனித நேயம் பரப்புதல் ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை” என்று வற்புறுத்துகிறது. ஏமாற்று வேலைகளுக்கும், புரட்டர்களுக்கும் இடமில்லாமல் செய்ய முடியும்.

இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், நடைமுறையில் செயலுரு கொண்டால், மேற்காட்டிய – ஏமாற்று வேலைகளுக் கும், புரட்டர்களுக்கும் இடமில்லாமல் செய்ய முடியும். ஏற்கெனவே பல ஆண்டுகளுக்குமுன் மகாராட்டிரத்தில் இத்தகைய மூடத்தனத்திற்கு எதிரான தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மராட்டிய பகுத்தறிவாளர் கொலை செய்யப் பட்ட மனிதநேயரான டாக்டர் தபோல்கர் இதற்காகப் பெரிதும் உழைத்து வெற்றி கண்டார். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் அமைந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையடைந்ததாகத் தெரியவில்லை. கேரளாவில் இதுபோன்ற ஒரு தனிச் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூடத்தனத் தொற்றுநோய்க்கு முடிவு கட்ட முன்வரவேண்டும்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணான தமிழ் நாட்டில் சிறப்போடு நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்’ அரசு, அவசியம் இப்படி ஒரு தனிச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, இம்மாதிரி மூடத்தனத் தொற்றுநோய்க்கு முடிவு கட்ட முன்வரவேண்டும். 51-ஏ(எச்) பிரிவின்படி அது அரசமைப்புச் சட்டக் அடிப்படை கடமையுமாகும்.

நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் தந்து வரலாறு படைக்க வேண்டுகிறோம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், இதை ஒரு தனிப் பெரும் சாதனையாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்குப் பரிசாக நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் தந்து வரலாறு படைக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here