spot_img
More
    முகப்புசெய்திகள்"கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!" வேல்முருகன் எம்.எல்.ஏ.,

    “கடலூர் சூறைக்காற்று இழப்பீடு வழங்குக..!” வேல்முருகன் எம்.எல்.ஏ.,

    கடலூர் சூறைக்காற்றால் வாழை, தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி புயல் நிவாரணம் வழங்குக" என்று வேல்முருகன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அறிக்கை:

    கடலூர் மாவட்டத்தில் ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, புலியூர் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இந்த சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 1000க்கு மேற்பட்ட ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமாகியிருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பேரிடியாக இறங்கி இருக்கிறது.

    குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கயிறு உற்பத்தி தொழில், கீற்று முடைதல், தேங்காய் மட்டை உரித்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    வாழை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு வாங்கிய கடனை கொடுத்து விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்தனர். ஆனால், ஓரளவு தமது வாழ்க்கைப்பாட்டை பாதுகாக்கலாம் என்ற விவசாயிகளின் எண்ணம் கானல் நீரானது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்ற சொலவடை விவசாயிகளுக்கு தான் முற்றிலும் பொருந்துகிறது.

    எனவே, கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கு எடுக்க வேண்டும். இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதோடு, அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    ஒரு சில கிராமங்களில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு, குறைந்தபட்சம், ஒரு மரத்துக்கு, 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தரமான தென்னங்கன்றுகளை, இலவசமாக வழங்க வேண்டும். அவற்றை பராமரிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு, பராமரிப்பு தொகை தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments