spot_img
More
    முகப்புசெய்திகள்"ஒடிசா ரயில் விபத்து கவலையளிக்கிறது..!" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    “ஒடிசா ரயில் விபத்து கவலையளிக்கிறது..!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து கவலையளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    உடனடியாக  ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.

    விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.

    உடனடியாக ஹெல்ப்லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments