ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக 24.05.2023 முதல் 07.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 147 சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பத்தாரர் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ வாயிலாக செலுத்தலாம்.
தரவரிசை: மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இதே இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் சலுகைகள் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்):
1. உதவித்தொகை ரூ750 மாதந்தோறும் ( வருகை நாட்களுக்கு ஏற்ப)
2. கட்டணமில்லா பேருந்து சலுகை
3. விலையில்லா மிதிவண்டி
4. விலையில்லா மடிக்கணினி
5. விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்
6. விலையில்லா சீருடை ஒரு செட்
7. விலையில்லா காலணி ஒரு செட்
8. பயிற்சிக்கு தேவையான பொருட்கள்
9. புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை.
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தை அத்தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கீழ்காணுமாறு அரசே செலுத்துகிறது.
1.பொறியியல் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.16,800 வீதம் பயிற்சி கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.
2. பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுன்ம் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.13,000 பயிற்சி கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மின் அஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com
அலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்: 9499055612

