spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது

    ‘’இந்தியா’வின் முதல் வெற்றி..!’’ முரசொலி சொல்கிறது

    ‘இந்தியா’வின் முதல் வெற்றி..!

    ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள கட்­சி­கள் நடந்து முடிந்­துள்ள இடைத் தேர்­தல்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளன. இது ‘இந்­தியா’ கூட்­ட­ணிக்­குக் கிடைத்த முதல் வெற்றி ஆகும்.

    6 மாநி­லங்­க­ளில் உள்ள 7 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளுக்கு நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் பா.ஜ.க. பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இது பா.ஜ.க.வுக்கு அடுத்­த­டுத்து வரப் போகும் தோல்­வி­யின் தொடக்­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது.

    * உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி தொகு­தியை சமாஜ்­வாதி கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

    * கேரள மாநி­லத்­தில் உள்ள புதுப்­பள்ளி தொகு­தியை காங்­கி­ரஸ் கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

    * மேற்கு வங்க மாநி­லத்­தில் உள்ள துப்­குரி தொகு­தியை திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

    * ஜார்­கண்ட் மாநி­லத்­தில் உள்ள தும்ரி தொகு­தியை ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கைப்­பற்றி இருக்­கி­றது.

    காங்­கி­ரஸ், சமாஜ்­வாதி, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா ஆகி­யவை ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள முக்­கிய கட்­சி­கள் ஆகும்.

    * திரி­புரா மாநி­லத்­தில் பாக்­ஸா­ந­கர், தன்­பூர் ஆகிய இரு தொகு­தி­­களை­யும் பா.ஜ.க. கைப்­பற்றி இருக்­கி­றது.

    * உத்­த­ர­கண்ட் மாநி­லத்­தில் பாகேஸ்­வர் தொகு­தி­யை­யும் பா.ஜ.க. கைப்­பற்றி உள்­ளது.

    இருப்­பி­னும், உத்­த­ரப்­பி­ர­தே­சம், மேற்கு வங்­கம், கேரளா ஆகி­யவை மிகப் பெரிய மாநி­லங்­கள் என்­ப­தால் ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் வெற்­றிக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கிடைத்­துள்­ளது.

    6 மாநி­லங்­களை உள்­ள­டக்­கிய 7 தொகு­தி­க­ளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடந்­தது. இந்த தேர்­தல்­கள் அந்­தந்த மாநில

    அள­வில் மிக­மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­பட்­டன. ‘இந்­தியா’

    கூட்­டணி உரு­வா­ன­தால் அகில இந்­திய அள­வி­லும் கவ­னத்­தைப் பெற்­றன.

    இதில் மிக­மிக முக்­கி­ய­மா­னது உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி சட்­ட­மன்­றத் தொகு­திக்கு நடந்த இடைத்­தேர்­தல் ஆகும். சமாஜ்­வாதி கட்­சி­

    யி­டம்­தான் இந்த தொகுதி இருந்­தது. எம்.எல்.ஏ.வான தாரா­சிங்

    செள­கான் என்­ப­வரை, வலுக்­கட்­டா­ய­மாக பா.ஜ.க.வுக்கு இழுத்­துச் சேர்த்­தார் முத­ல­மைச்­சர் யோகி ஆதித்­ய­நாத். அவர் கடந்த ஜூலை மாதம் தனது பத­வியை ராஜி­னாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்­தார். பா.ஜ.க.வில் இணைந்­தால், இடைத்­தேர்­த­லி­லும் நீங்­கள்­தான் பா.ஜ.க. வேட்­பா­ளர் என்று யோகி வாக்­கு­றுதி கொடுத்­தார். பா.ஜ.க.

    சார்­பில் தாரா­சிங் செள­கான் போட்­டி­யிட்­டார். சமாஜ்­வாதி கட்சி சார்­பில் சுதா­கர் சிங் போட்­டி­யிட்­டார். இரண்டு கட்­சி­க­ளுக்­கும் கடு­மை­யான மோதல் ஏற்­பட்­டது. பா.ஜ.க. வேட்­பா­ளரை விட 42 ஆயி­ரம் வாக்­கு­கள் அதி­கம் பெற்று சமாஜ்­வாதி வேட்­பா­ளர் வெற்றி பெற்­று­விட்­டார்.

    இது யோகிக்கு மிகப் பெரிய சறுக்­க­லாக அமைந்­துள்­ளது. இதன்­­மூலம் எதிர்க்­கட்சி எம்.எல்.ஏ.க்களை வலை­வீசி பிடிக்­கும் பா.ஜ.க. பார்­மு­லா­வுக்கு உத்­தரபிர­தேச மக்­கள் சம்­மட்டி அடி கொடுத்­துள்­ள­னர்.

    உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கடந்த 6 மாதங்­க­ளில் 3 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் நடை­பெற்­றது. இதில், 3 தொகுதி களி­லும் பா.ஜ.க. படு­தோல்­வி­ய­டைந்­தது. இந்த 3 தொகுதிகளி­லும் மிகப்­பெ­ரிய வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் பா.ஜ.க. தோல்­வி­யைத் தழு­வி­யி­ருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

    கேரள மாநி­லம் புதுப்­பள்ளி தொகு­தி­யில் காங்­கி­ரஸ் முன்­னாள் முத­ல­மைச்­சர் உம்­மன் சாண்­டி­யின் மகன் சாண்டி உம்­மன் 37 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார். காங்­கி­ரஸ்

    வேட்­பா­ளர் 80 ஆயி­ரம் வாக்­கு­க­ளும், அடுத்து வந்த மார்க்­சிஸ்ட் வேட்­பா­ளர் 42 ஆயி­ர­மும் பெற்ற நிலை­யில் பா.ஜ.க. மூன்­றா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டது. பா.ஜ.க. வேட்­பா­ளர் லிஜின் லால் வாங்­கிய வாக்­கு­கள்

    6 ஆயி­ரத்து 558 தான். இவ­ரது டெபா­சிட்டே பறி போய்­விட்­டது. இதே தொகு­திக்கு 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்­த­லில் போட்­டி­யிட்ட பா.ஜ.க. வேட்­பா­ளர் ஹரி வாங்­கிய வாக்­கு­கள் 11 ஆயி­ரத்து 694. இப்­போது இரண்டு ஆண்­டு­க­ளில் 5 ஆயி­ரம் வாக்­கு­கள் பா.ஜ.க.வுக்கு குறைந்­து­ விட்­டது. இது­தான் உன்­னிப்­பாக கவ­னிக்­கத்­தக்­கது ஆகும்.

    மேற்­கு­வங்க மாநி­லம் துப்­குரி தொகுதி, பா.ஜ.க. வசம் முன்பு இருந்­தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான விஷ்­ணு­பத ராய் மர­ணம் அடைந்­தார். எனவே அத்­தொ­கு­தி­யில் நடை­பெற்ற இடை­தேர்­த­லில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் வெற்றி வாகை சூடி­யுள்­ளது. அக்­கட்சி வேட்­பா­ளர் நிர்­மல் சந்­திர ராய், தன்னை எதிர்த்து போட்­டி­யிட்ட பா.ஜ.க. வேட்­பா­ளரை காட்­டி­லும்

    4 ஆயி­ரத்­துக்­கும் அதிக வாக்­கு­கள் பெற்று வெற்­றியை தன­தாக்­கி­னார். காஷ்­மீ­ரில் மர­ணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனை­வியை நிறுத்தி அனு­தாப வாக்­கு­களை வாங்க முயற்­சித்­தது பா.ஜ.க. அதி­லும் தோல்­வி­யைத் தழு­வி­யது.

    ஜார்க்­கண்ட் மாநி­லம் தும்ரி தொகு­தி­யில் நடை­பெற்ற இடைத்­தேர்­­தலில் ஜார்க்­கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்­பா­ளர் பிபி தேவி, 1 லட்­சத்­துக்­கும் கூடு­த­லான வாக்­கு­களை பெற்­றுள்­ளார். 17 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் பா.ஜ.க. ஆத­ரவு வேட்­பா­ளரை தோற்­க­டித்­தார்.

    திரி­புரா மாநி­லத்­தி­லுள்ள 2 தொகு­தி­க­ளி­லும், உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தி­லுள்ள ஒரு தொகு­தி­யி­லும் பா.ஜ.க. வெற்றி பெற்­றது.உத்­தி­ர­காண்­டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்­தன் ராம் தாஸ் அண்­மை­யில் மர­ணம் அடைந்­தார். அவ­ரது மனை­வி­யையே வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யது பா.ஜ.க. ஆனா­லும் 2 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில்­தான் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்­தது.

    -– இவை அனைத்­தை­யும் வைத்­துப் பார்க்­கும் போது, ‘இந்­தியா’

    கூட்­ட­ணியை நோக்கி இந்­திய மக்­கள் அணி திரள்­வதை அறிய முடி­கி­றது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments