spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு''அண்­ணன் இருக்­கின்­றார்..!'' முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்

    ”அண்­ணன் இருக்­கின்­றார்..!” முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்

    ’’அண்­ணன் இருக்­கின்­றார்!” என்று முரசொலியில் இன்று (15.09.2023) தலையங்கம் வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் அந்த தலையங்கத்தை நீங்களும் வாசியுங்கள். வராற்றை தெரிந்து வாழுங்கள்.

    அண்­ணன் இருக்­கின்­றார்!

    சந்­த­னமே!

    தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்­காற்றே!

    நந்­தாச் சுடர் விளக்கே!

    நறு­ம­ணத்­துப் புது­ம­லரே!

    கண்­ணி­யத்­தைக் கட­மை­யி­னைக் கட்­டுப்­பா­டெ­னும்

    பண்­பைக் கண்­போ­லக் காத்­தி­டற்­குக்

    கற்­பித்த பெருந்­த­கையே!

    சிங்­கத் தமி­ழர்­க­ளின் சிந்­தை­யெ­லாம் பறி­கொண்டு

    வங்­கக் கட­லோ­ரம் வாய்­மூ­டிக் கண்­மூடி

    மோனத் தவ­மி­ருக்­கும் முத்­த­மிழே!

    குடி­சை­யெ­லாம் மேலு­யர்ந்து

    கோபு­ர­மாய் விளங்­கி­ட­வும்

    மட­மை­யி­ருள், கொல்­வ­றுமை

    மடிந்தே மரு­கி­ட­வும்

    எல்­லா­ரும் நல­னெல்­லாம்

    எய்தி மகிழ்ந்­தி­ட­வும்

    நல்­ல­தோ­ராட்­சி­யி­னைத்

    தோற்­று­வித்த நாய­கமே!

    எண்­ணக் குறிப்­ப­றிந்தே

    ஈடேற்­றும் தம்­பி­ய­ரின் அண்­ணாவே!

    எனை­யிங்கே ஆளாக்­கிக்

    காத்­திட்ட ஆரு­யிரே!

    நும்­க­னவு அத்­த­னை­யும் நன­வாக்­கும்

    சீரி­ய­நற் பணி­யி­னையே செய்­கின்­றோம்

    நாள்­தோ­றும்!

    செய்­ப­ணி­கள் அனைத்­தி­லுந்­தான்

    அண்­ணனே! நீ இருக்­கின்­றாய்!

    -– என்றே எழு­தி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்! காஞ்சி தந்த வள்­ளு­வன் பேர­றி­ஞர் அண்ணா,

    உத­ய­மான நாள் செப்­டம்­பர் 15 அன்று. அது இன்று!

    முதன் முறை சட்­ட­மன்­றத்­துக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அண்ணா அவர்­கள் தனது கன்­னிப் பேச்­சில் கனல் தெறிக்க ஒரு கருத்­தைச் சொன்­னார்­கள். “நாங்­கள் ஒரு விசித்­திர அர­சி­யல் கூட்­டத்­தி­னர் என்று நீங்­கள் அறி­வீர்­கள். இந்­தச் சபை­யும் அறி­யும். நாங்­கள் ஒரு விசித்­திர அர­சி­யல் கூட்­டத்­தி­னர் என்­றால் எங்­க­ளைத் தோற்­று­வித்­த­தும் இந்த நாட்­டி­லுள்ள ஒரு விசித்­தி­ர­மான தலை­மை­தான் என்­பதை யாவ­ரும் உணர வேண்­டும். விசித்­தி­ர­மான நிலை­மை­கள்­தான் விசித்­தி­ர­மான கட்­சி­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன” என்று அண்ணா அவர்­கள் குறிப்­பிட்­டார்­கள்.

    இன்­னொன்­றை­யும் சொன்­னார் அண்ணா தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன். “இந்த சபைக்கு நாங்­கள் வந்­தது என்­றைக்­கும் எதிர் அங்­கத்­தி­னர்­க­ளா­கவே இருப்­ப­தற்­காக நுழை­ய­வில்லை. இன்­றைக்கு இல்­லா­விட்­டா­லும் என்­றைக்­கா­வது ஒரு­நாள் ஆட்­சிப் பொறுப்பை ஏற்­கத்­தான் போகி­றோம்” –- என்று அண்ணா அவர்­கள் சொன்ன நாள்: 4.7.1957. எண்ணி பத்தே ஆண்­டில் அரி­ய­ணை­யில் அமர்ந்­து­விட்­டார்.

    தமிழ்­நாடு என்று பெயர் சூட்­டி­னார். இன்று வரை ‘தமிழ்­நாடு’ என்ற பெயரே அச்­சம் தரு­வ­தாக இருக்­கி­றது. தமி­ழும் ஆங்­கி­ல­மும் என்­பதை வரை­ய­றுத்­தார். இந்­தித் திணிப்­புக்கு தடுப்­புச் சுவர் அப்­ப­டியே இருக்­கி­றது. இன்று மற்ற மாநி­லங்­க­ளும் இந்­தித் திணிப்பை எதிர்க்­கத் தொடங்கி இருக்­கின்­றன. சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணம் செல்­லும் என்­றார் அண்ணா. கடந்த வாரம் கூட உச்­ச­நீ­தி­மன்­றம் இதனை உறுதி செய்­துள்­ளது. ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்­தார் அண்ணா!

    அண்ணா மறை­வுற்ற போது பெரி­யார் சொன்­னார்: ‘அண்ணா இருப்­பது போலவே காரி­யங்­கள் நடை­பெற வேண்­டும்’ என்று! இந்த சொற்­க­ளுக்­குள்­தான் எத்­தனை பொருள்? அண்ணா இருப்­ப­தைப் போலவே கொள்கை இருக்க வேண்­டும், கோட்­பாடு இருக்க வேண்­டும், கழ­கம் இருக்க வேண்­டும், கண்­ணி­யம் நிலைக்க வேண்­டும், கட்­டுப்­பாடு காக்க வேண்­டும், தமிழ்­நாடு காப்­பாற்­றப்­பட வேண்­டும். இவை அனைத்­தும் சேர்ந்­தது தான், ‘அண்ணா இருப்­பது போலவே காரி­யங்­கள் நடை­பெற வேண்­டும்’ என்­பது ஆகும்.

    கலை­ஞ­ராட்சி, அண்­ணா­வின் ஆட்­சி­யாக அப்­ப­டியே தொடர்ந்­தது. மாநில சுயாட்சி இல்­லையே என்று வருந்­தி­னார் அண்ணா. மாநில சுயாட்­சியை இந்­திய அர­சி­ய­லுக்­குள் கொண்டு சென்று அதனை நிலை­நி­றுத்த அய­ராது உழைத்­தார் கலை­ஞர். மாநில சுயாட்­சித் தீர்­மா­னம் போட்ட முதல் இந்­திய மாநி­ல­மாக தமிழ்­நாட்டை மாற்­றி­னார் கலை­ஞர். மாநி­லக் கட்­சி­க­ளின் கருத்­தைக் கேட்டு ஒன்­றிய அரசு செயல்­ப­டும் நிலையை உரு­வாக்­கி­னார். கூட்­டணி ஆட்சி என்­பது கூட்­டாட்­சி­யா­க­வும்– மாநில சுயாட்­சியை உயிர்ப்­பிப்­ப­தா­க­வும் ஆக்­கி­னார் கலை­ஞர். சமூ­க­நீ­திக் கோட்­பாட்டை இந்­தி­ய­வி­யல் கோட்­பா­டாக மாற்ற – மண்­டல் ஆணை­யத்­தின் பரிந்­து­ரை­க­ளைச் செயல்­ப­டுத்த வைத்­தார் கலை­ஞர்.

    மாநி­லக் கட்­சி­கள்­தானே, ஒரு மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் தானே, ஒரு மாநி­லக் கட்­சித் தலை­வர்­தானே என்ற ஏள­னப் பேச்சை அகற்றி, ‘மாநி­லக் கட்­சித் தலை­வர்­களே, அகில இந்­தி­யத் தலை­வர்­க­ளாக வலம் வர­லாம்’ என்ற நிலையை கலை­ஞர் உரு­வாக்­கி­னார். வடக்­கின் தராசை கொஞ்­சம் இறக்கி, தெற்­கின் தராசை கொஞ்­சம் உயர்த்தி -– ஒன்­றிய முள்­ளின் முனையை கொஞ்­சம் மழுக்­கிக் காட்­டி­னார் கலை­ஞர். ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்­தார் கலை­ஞர்!

    அந்த உரு­வாக்­கத்­தின் இன்­றைய செயல்­வ­டி­வ­மாக திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் காட்சி அளிக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டுக்­குள் உரு­வான கூட்­டணி பாணியை அகில இந்­தி­யா­வுக்­கும் விரித்­தார் இவர். ‘கரும்பு ஆலை­யில் மீண்­டும் மீண்­டும் பிழி­வ­தைப் போல ஒரு சொட்­டுக் கூட சிந்­தா­மல் பிழிய வேண்­டும்’ என்று கூட்­ட­ணிக்­கான பாணி­யைச் சொன்­னார் அண்ணா. செய்து கொண்­டி­ருக்­கி­றார் இன்­றைய தலை­வர். ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யின் விதை மட்­டு­மல்ல, பதி­ய­மும் இங்கே போடப்­பட்டு, ஒவ்­வொரு மாநி­லத்­துக்­கும் எடுத்­துச் சென்று நட்­டு­விக்­கப்­பட்­டது. இனி தோப்­பா­கும்.

    அண்­ணாவே நினைத்­துப் பாராத உச்­சம் இது!

    ‘திரா­விட மர­பி­னத்­தைச் சார்ந்­த­வன் நான்’ –- என்று சொன்­னார் அண்ணா. திரா­விட மாடல் ஆட்சி என்ற பெயரே அச்­ச­மூட்­டு­கி­றது. ‘அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்’ என்­றார் கலை­ஞர். ஜாதி வேறு­பாடு மட்­டுமே அவ­ரால் நீக்க முடிந்­தது. இதோ பெண் ஓது­வார்­கள் பாடும் காட்­சி­யைப் பார்க்­கும் போது பால் பேத­மும் பஞ்­சாய் பறக்­கி­றது. தமிழ்­நாடு அர­சின் செயல் திட்­டங்­களை பிற மாநி­லங்­கள் பின்­பற்­றும் வண்­ணம் ஒரு கொள்­கை­யாட்­சியை நடத்தி வரு­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர். ‘மத­றாசி’ போய்­விட்­டது இப்­போது. ‘இப்­படி ஒரு முத­ல­மைச்­சர் வேண்­டும்’ என்று வங்­கா­ளத்­தி­லும், மலை­யா­ளத்­தி­லும் தெலுங்­கி­லும் குரல் கேட்­கி­றது. ‘விசித்­தி­ர­மான நிலை­மை­களை மாற்ற வந்த விசித்­தி­ர­மான கட்சி’ என்­பதை நிரூ­பித்து வரு­கி­றார் தலை­வர் மு.க.ஸ்டாலின்!

    தொடக்­கத்­தில் சொல்­லப்­பட்ட கவி­தைக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வைத்த தலைப்பு: ‘அண்­ணன் இருக்­கி­றார்’. ஆமாம்! அண்­ணன் இருக்­கி­றார். வாழ்­கி­றார். ஆள்­கி­றார்.

    அண்ணா வாழ்க!

    அண்ணா ஆட்சி தொடர்க!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments