spot_img
More
    முகப்புசெய்திகள்'’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின்

    ‘’அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ முதல்­வர் மு.க.ஸ்டாலின்

    ‘‘ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!’’ என்று முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச் சாவடி பாக முக­வர்­கள் பயிற்சி பாச­றைக் கூட்­டத்­தில் காணொலி மூல­மாக உயைாற்­றும்­போது கூறினார்.

    திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் நேற்று (5–-11-–2023) திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்ற சென்னை மண்­டல வாக்­குச்­சா­வடி பாக முக­வர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் உடல்­நிலை கார­ண­மா­கக் காணொலி மூல­மா­கக் கலந்­து­கொண்டு கீழ்க்­கா­ணு­மாறு பேசி­னார்.

    முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆற்­றிய உரை வரு­மாறு:–

    திடீ­ரென்று காய்ச்­ச­லும் – தொண்டை வலி­யும் எனக்கு ஏற்­பட்­டு­விட்ட கார­ணத்­தால் இந்த நிகழ்ச்­சிக்கு நேர­டி­யாக வந்து உங்­களை எல்­லாம் சந்­தித்து உரை­யாற்­றா­மல் போன­தற்­காக நான் முத­லில் என்­னு­டைய வருத்­தத்தை மிகுந்த பணி­வோடு உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

    இந்­தக் கூட்­டத்தை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­தி­ருக்­கும் – தனித்­த­னி­யாக சொல்ல வேண்­டும் என்று ஆசை, ஆனால்தொண்டை சரி­யில்லை. ஒட்­டு­மொத்தஅத்­தனை பேருக்­கும், இதில் உண்­மை­யாக பாடு­பட்டு பணி­யாற்­றிய நம்­மு­டைய கட்சி உடன்­பி­றப்­பு­கள், சகோ­த­ரர்­கள், நண்­பர்­கள், நிர்­வா­கி­கள், பல்­வேறு அணி­க­ளைச் சார்ந்­த­வர்­கள், மாவட்­டச் செய­லா­ளர்­கள் எல்­லா­வற்­றிற்­கும் மேல் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அன்பு உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய இத­யப்­பூர்­வ­மான நன்­றியை, வணக்­கத்தை நான் முத­லில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

    நான் அங்கு வர­வில்லை என்று சொன்­னா­லும் என்­னு­டைய நினை­வு­கள் எல்­லாம் அங்கு என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது… எப்­படி சென்று கொண்­டி­ருக்­கி­றது என்­று­தான் என்­னு­டைய சிந்­தனை எல்­லாம் இருந்­தது. தொடர்ந்து விசா­ரித்­துக் கொண்­டி­ருந்­தேன். அத­னால் நீங்­கள் யாரும் என்­னைத் தவ­றாக நினைத்­துக் கொள்ள மாட்­டீர்­கள் என்று கரு­து­கி­றேன். அதி­கம் பேசக்­கூ­டாது என்று மருத்­து­வர்­கள் கட்­டா­யப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். அதை எல்­லாம் மீறி வந்து இங்கே வந்து உட்­கார்ந்­தி­ருக்­கி­றேன். இப்­போது என்­னு­டைய பேச்­சைச் சுருக்­க­மாக தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.

    உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!

    நிகழ்­வில் கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் படித்த கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் உரை பின்­வ­ரு­மாறு:–

    காத்­தி­ருக்­கும் நாடா­ளு­மன்­றக் களத்­தில்,கனிந்து வரும் வெற்­றிக் கனி­யைப் பறிக்க – விளைந்து நிற்­கும் வெற்­றியை வீடு சேர்க்க –நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பணிக்­கான தொடக்­கப்­புள்­ளி­யான இந்த வாக்­குச் சாவடி பொறுப்­பா­ளர்­கள் கூட்­டம், திருச்சி – இரா­ம­நா­த­பு­ரம் – திருப்­பூர் – – திரு­வண்­ணா­ ம­லை­யைத் தொடர்ந்து, இன்று திரு­வள்­ளூ ­ரில் நடை­பெ­று­கி­றது.

    இந்த மாநாட்டை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார் ராணிப்­பேட்டை காந்தி அவர்­கள். ராணிப்­பேட்டை காந்தி அவர்­களை திரு­வள்­ளூர் காந்தி என்றே இன்­றைக்கு சொல்­ல­லாம். அந்­த­ள­விற்கு இங்­கேயே இருந்து பணி­யாற்­றிக் கொண்­டி ­ருக்­கி­றார்.

    அமைச்­சர் காந்தி!

    காந்தி அவர்­க­ளி­டம் ஒரு பணி­யைக் கொடுத்­தால், அதைச் சிறப்­பா­கத்­தான் செய்­வார். இதனை இன்று நேற்­றல்ல, பல ஆண்­டு­க­ளா­கப் பார்த்து பாராட்­டிக்­கொண்டு வரு­கி­றேன். அவர் மன­தில் பட்­டதை பட்­டென்று சொல்­வார்; என் மன­தில் நினைப்­பதை சட்­டென்று செய்­வார். அது­தான் காந்தி! அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த திரு­வள்­ளூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்.

    இன்று காலை முதல்,

    * ‘வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளின் கட­மை­க­ளும் பணி­க­ளும்’ என்ற தலைப்­பில், மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ அவர்­க­ளும்,

    * ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­புப் பணி­கள் மற்­றும் அதன் முக்­கி­யத்­து­வம்’ குறித்து,செயல்­வீ­ரர் தா.மோ. அன்­ப­ர­சன் அவர்­க­ளும்,

    * ‘சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பாடு, செயல்­ப­டுத்த வேண்­டிய முறை­கள்’ குறித்து, திரா­விட இயக்க எழுத்­தா­ளர் சகோ­த­ரர் லெனின் அவர்­க­ளும்,

    * கழ­கத்­தின் வர­லாறு, அடிப்­ப­டைக் கொள்­கை­கள், திரா­விட இயக்­கத்­தின் கோட்­பா­டு­கள், நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்க நாம் எடுத்த முயற்­சி­கள், திரா­விட மாடல் ஆட்சி ஆகி­யவை குறித்து,

    நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சகோ­தரி தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளும், எதார்த்த பேச்­சா­ளர் – திரா­வி­டப் பற்­றா­ளர் இயக்­கு­நர் கரு.பழ­னி­யப்­பன் அவர்­க­ளும் – என காலை முதல் இவர்­கள் மூல­மாக கொள்கை வழி­காட்­டு­த­லும், தேர்­தல் பயிற்­சி­யும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

    இவை­யெல்­லாம் இந்­தத் தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, எல்­லாத் தேர்­த­லுக்­கும் பயன்­ப­டும். இது எல்­லா­வற்­றை­யும் மன­தில் வைத்து நீங்­கள் செயல்­பட வேண்­டும்

    செய­லா­ளர்­க­ளுக்­குப் பாராட்டு!

    இன்று 11 மாவட்­டக் கழ­கங்­க­ளில் இருந்து, 11 ஆயி­ரத்து 569 பேர், ஆற்­றல்­மிகு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளால் அழைத்துவரப்­பட்­டுள்­ளீர்­கள். இதனை ஒருங்­கி­ணைத்த,

    * திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சா.மு.நாசர்

    * திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன்

    * திரு­வள்­ளூர் மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் எஸ்.சந்­தி­ரன்

    * சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு

    * சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்

    * சென்னை தென்­மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மயிலை த.வேலு

    * சென்னை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – நே.சிற்­ற­ரசு

    * சென்னை வட­கி­ழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – மாத­வ­ரம் எஸ்.சுதர்­ச­னம்

    * சென்னை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – தா.இளை­ய­அ­ருணா

    * காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – அமைச்­சர் தா.மோ. அன்­ப­ர­சன்

    * காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – க.சுந்­தர்

    – ஆகிய அனை­வ­ருக்­கும் பாராட்­டு­கள்! வாழ்த்­து­கள்!

    கம்­பீ­ரத்­தோடு பணி­யாற்­றுங்­கள்!

    வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள்­தான் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் வாக்­கா­ளர்­க­ளுக்­கும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வெற்­றிக்­கும் முழுப் பொறுப்பு!

    உங்­களை நம்­பித்­தான் ’நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்­பீ­ர­மாக முழங்­கு­கி­றோம்! அதே கம்­பீ­ரத்­தோடு இன்­றில் இருந்தே நீங்­க­ளும் தேர்­தல் பொறுப்­பா­ள­ரா­கக் கட­மை­யாற்ற வேண்­டும்!

    அதற்கு,

    * வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சரி­பார்ப்­பது,

    * முறை­யான வாக்­கா­ளரை நம்மை நோக்கி ஈர்ப்­பது,

    * வாக்­குப்­ப­திவு நாளில் வாக்­கா­ளர்­களை வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு வர­வ­ழைப்­பது என உங்­க­ளு­டைய கட­மை­க­ளைச் சரி­யாக – முறை­யா­கச் செய்ய வேண்­டும்!

    உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் ஒரு­வ­ராக நீங்­கள் மாற வேண்­டும். கழ­கத்­துக்­காக தின­மும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்­டும். அர­சின் திட்­டங்­க­ளை­யும் முழு­மை­ யா­கத் தெரிந்­து­கொள்ள வேண்­டும். உங்­க­ளி­டம் இன்­றைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கும் புத்­த­கத்­தைப் படித்­துப் பார்த்­தாலே, அர­சின் திட்­டங்­கள் பற்றி உங்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டும். அதை வைத்து, மக்­க­ளுக்கு உதவி செய்­யுங்­கள்.

    வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள் கொண்டு வரும் கோரிக்­கை­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுத்து நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­றித்­தர வேண்­டும் என்று அமைச்­சர்­க­ளி­ட­மும், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளி­ட­மும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மும் உத்­த­ர­வா­கவே நான் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.

    தமிழ்­நாட்­டில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­ப­மும் பய­ன­டை­யும் வகை­யில் பார்த்­துப் பார்த்து திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம். இத­னால் மக்­கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்­ளார்­கள்.

    கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம், விடி­யல் பய­ணம், முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம் என நமது திரா­விட மாடல் அர­சின் எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் நான் விளக்­க­மா­கச் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவை­யெல்­லாம் உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்!

    இதே மாதி­ரி­யான சாத­னை­கள் ஒன்­றிய அள­வி­லும் நிகழ்த்­தப்­பட வேண்­டும் என்­று­தான் இந்­தியா கூட்­ட­ணியை நாம் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.

    பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது!

    இந்­தியா கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக நாம் செய்ய வேண்­டிய கட­மை­கள் என்­ன­வென்­றால், நாம் செய்த – செய்­கிற சாத­னை­களை மட்­டும் சொல்­லா­மல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்­ப­டுத்த வேண்­டும்!

    தமிழ்­நாட்­டுக்­காக எந்­தச் சிறப்­புத் திட்­டத்­தை­யும் கொண்டு வரா­மல் தமிழ்­நாட்டை ஒன்­றிய பா.ஜ.க. அரசு வஞ்­சிக்­கி­றது. பா.ஜ.க.வின் இந்­தத் துரோ­கத்­தை­யும் மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

    பா.ஜ.க.வின் கைப்­பா­வை­யாக அத்­தனை துரோ­கத்­துக்­கும் சுய­ந­லத்­து­டன் துணை நின்­றது, அடிமை அ.தி.மு.க.! இன்­றைக்­குப் பிரிந்­தது போல நாட­கம் நடத்­தும் இந்த கும்­ப­லின் துரோ­கங்­க­ளைப் பட்­டி­யல்போட்டு மக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும்!

    தி.மு.க.வும் இந்­தியா கூட்­ட­ணி­யும் பா.ஜ.க.வின் மக்­கள் விரோ­தத் தன்­மையை அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது என்­று­தான், எதிர்க்­கட்­சி­களை அச்­சு­றுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யி­ருக்­கி­றது பா.ஜ.க. அத­னால்­தான், வரு­மான வரித்­துறை ரெய்டு எல்­லாம் நடை­பெ­று­கி­றது.

    ரெய்­டு­கள் மூல­மாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்­டிய இடங்­க­ளில் எல்­லாம் கையெ­ழுத்து வாங்­கி­ய­து­போல் நம்­மை­யும் மிரட்­ட­லாம் என்று பகல்­க­னவு காண்­கி­றார்­கள். இந்த சல­ச­லப்­பு­க­ளுக்­கும் – அச்­சு­றுத்­தல்­க­ளுக்­கும் – மிரட்­டல்­க­ளுக்­கும் பயப்­ப­டும் இயக்­க­மல்ல தி.மு.க.!

    75 ஆண்­டு­கா­ல­மாக இதை­யெல்­லாம் எதிர்த்து நின்­று­தான் நாங்­கள் வெற்றி பெற்­றுள்­ளோம்; அந்த வெற்றி என்­றைக்­கும் தொட­ரும்! வரு­மான வரித் துறைக்­கும், அம­லாக்­கத்­து­றைக்­கும் எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­கள் மட்­டும்­தான் கண்­க­ளுக்­குத் தெரி­கி­றது.

    மாநி­லங்­கள் மட்­டும் தெரி­கி­றது!

    பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் வரு­மான வரித்­துறை யும், அம­லாக்­கத்­து­றை­யும் அவ­ர­வர் அலு­வ­ல­கத்தைவிட்டு வெளி­யே­கூட வரு­வ­தில்லை.

    ஆனால், இங்கு நம் தமிழ்­நாட்­டில், நம்­மு­டைய இயக்­கத்­தி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரை­யா­கச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­போது அமைச்­சர் சகோ­த­ரர் வேலு அவர்­க­ளைச் சோதனை செய்­கி­றார்­கள். இப்­படி, வரு­மான வரித்­துறை, அம­லாக்­கத்­து­றை­யின் ரெய்­டு­க­ளில், வழக்­கு­க­ளில் – Conviction Rate எவ்­வ­ளவு என்று பார்த்­தால், அவர்­கள் விசா­ரிக்­கும் வழக்­கு­க­ளில் ஒரு விழுக்­காடு கூட இல்லை.

    வெறும் அர­சி­யல் பழி­வாங்­க­லுக்­கான – பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­கள்­தான் வரு­மான வரித்­து­றை­யும், அம­லாக்­கத்­து­றை­யும்! அத­னால்­தான் வரு­கின்ற நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைத் தேர்­தல் மிக மிக முக்­கி­யம் என்று சொல்­கி­றேன். இந்­தத் தேர்­த­லில் நாம் பெறப்­போ­கிற வெற்றி என்­பது, மகத்­தான வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.

    கொள்கை என்று எது­வுமே இல்­லா­மல், ஊழல் மட்­டுமே அச்­சாணி என்று ஆட்­சி­யில் இருந்து தமிழ்­நாட்டை நாசப்­ப­டுத்­திய அடிமை அ.தி.மு.க.வும் – தமிழ்­நாட்­டின் எல்லா உரி­மை­க­ளை­யும் பறித்து தமிழ்­நாடு என்ற அடை­யா­ளத்­தையே சிதைக்க நினைக்­கும் பா.ஜ.க.வும் –சுய­ந­லத்­தின் கார­ண­மாக இந்த இரு கட்­சி­க­ளுக்­கும் துணை போகும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் – வெளிப்­ப­டை­யான கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி – மறை­மு­கக் கூட்­ட­ணி­யாக வந்­தா­லும் சரி, தமிழ்­நாட்­டில் எந்த தொகு­தி­யி­லும் அவர்­க­ளுக்கு டெபா­சிட் கூட கிடைக்­கக் கூடாது!

    இது, கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளான உங்­கள் கையில்­தான் இருக்­கி­றது. நாற்­ப­துக்­கும் நாற்­பது என்­கிற வெற்­றியை நாம் அடைந்­தாக வேண்­டும். கழக உடன்­பி­றப்­பு­க­ளாக நம்­மு­டைய இலக்கு இது­தான். அதற்கு இன்று முதல் உழைத்­தாக வேண்­டும்! இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யைப் பிடித்­தாக வேண்­டும்! வள­மிகு இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும்! அடுத்து வெற்றி விழா கூட்­டத்­தில் சந்­திப்­போம்! வாழ்க இந்­தியா! வெல்க இந்­தியா கூட்­டணி!

    இவ்­வாறு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் படித்­தார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments