spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''எஸ்.பி.ஐ வங்கியில் நிரந்தர வேலை; 8283 காலிப்பணியிடம்..! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

    ”எஸ்.பி.ஐ வங்கியில் நிரந்தர வேலை; 8283 காலிப்பணியிடம்..! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

    எஸ்.பி.ஐ வங்கி என்று அழைக்கப்படும் ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியா-வில் ஜூனியர் அசோசியேட் வேலைக்கு பட்டதாரிகளை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் மொத்தம் 8283 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

    பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருப்போரும் இந்த தேர்வை எழுதலாம். 01.04.2023 அன்று 20 வயதுக்கு மேல் 28 வயதுக்குள் இருப்போர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.04.1995 ஆம் தேதிக்கு முன்னதாகவோ, 01.04.2003 ஆகிய தேதிக்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.

    இருப்பினும் உச்சபட்ச வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டும் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் எஸ்.சி., எஸ்.டி பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

    முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி முன்னாள் ராணுவத்தினர், விதவை, டைவர்ஸ் ஆன பெண்கள், மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவனை விட்டு சட்டப்பூர்வமாக பிரிந்து இருப்போர் என்ற பிரிவில் வருவோருக்கு மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்.பி.ஐ வங்கியில் அப்ரண்டிஸ் தேர்வெழுதி வேலைபார்த்தவர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி விதிகளின் படி உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவில் பொருளாதரத்தில் பின் தங்கியோர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 750 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

    முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக எஸ்பிஐ-யின் ஜூனியர் அசோசியேட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுகள் கொள்குறி வகையை சார்ந்தது. அதாவது, ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்படும். அதில், மிகச்சரியான விடை ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வை தமிழிலும் எழுதலாம். நாடு முழுவதும் உள்ள மொத்தம் காலிப்பணியிடம் 8,283.

    இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான முழு விளம்பரத்தையும் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் https://bank.sbi/web/careers/current-openings OR
    https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையத்தை பயன்படுத்த வேண்டும். பட்டதாரிகளே, இந்த பொன்னான வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடனே,விண்ணப்பியுங்கள்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments