Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024 - Madras Murasu
spot_img
More
    முகப்புகல்வி'' B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!'' விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024

    ” B.Ed முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை ..!” விண்ணப்பம் பதிவு இறுதி நாள் 26.09.2024

    தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

    விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai -15” என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

    மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 16.09.2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் : 26.09.2024 . தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments