spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’ மாணவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’’ கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    ’’ மாணவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’’ கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    ’’மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்’’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார்.

    மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய செயல்முறைகள் சார்ந்த விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில்,  உயர்நிலை ஆய்வுக் கூட்டம் 28.05.2026 அன்று புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு. சஞ்சய் குமார்,  சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி, ஐஐடி கான்பூர் இயக்குனர் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன்-ஐச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    May be an image of studying, table and text

    இந்த கூட்டத்தில், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் உடனுக்குடன், வெளிப்படையான மற்றும் மாணவர் – நட்பு ரீதியிலான முறையில் தீர்வு காணப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் மாணவர் – மைய அணுகுமுறையைக் கொண்ட தேர்வு முறையை உறுதி செய்வதில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். அதேவேளையில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள நியாயமான அச்சங்கள் அனைத்தும் திறம்பட விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

    May be a graphic of text that says "CE ស្ញី সাহ্মারিক M मास्त जद्दतोमा अदतीासल्रामम সाभ CENTRAL BOARD OF SECONDARY EDUCATION Committed to Equity and Excellence in Education Post-Result Post 24X7 Support for Students We've deployed a robust, student-centric centric support system to guide you through every step: Tele-Counselling: Our dedicated toll-free helpline 1800-11-8004 is fully operational for stress management and evaluation queries. Direct Support: Quick help is available via official email channels at info.cbse@nic.in resultcbse2026@cbseshiksha.in f CBSEHQ Ha CBSE cbse_hq_1929 cbseindia29 CBSE HQ www.cbse.gov.in"

    மாணவர் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துதல், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், சிபிஎஸ்இ-ன் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துதல், மற்றும் தேர்வு தொடர்பான சேவைகளை மாணவர்களுக்கு எளிதாகவும், திறம்படவும் கிடைக்கச் செய்தல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தி, தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய சேவைகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்தார்.

    இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 18 லட்சம் மாணவர்கள் எழுதியதாகவும், இதில் சுமார் 98 லட்சம் விடைத்தாள்களும், ஏறக்குறைய 40 கோடி ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, சுமார் நான்கு லட்சம் மாணவர்கள், இணையதளம் வாயிலாக ஏறக்குறைய 11 லட்சம் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிட்டுள்ளனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments