அண்டால்யா,
உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டது.
இதில் இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கால்இறுதியில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேயையும், அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது.
இதே போல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.