spot_img
More
    முகப்புசெய்திகள்"தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023-க்கு விண்ணப்பிக்க மே10 கடைசி நாள்..!

    “தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023-க்கு விண்ணப்பிக்க மே10 கடைசி நாள்..!

    தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மே 10 கடைசி நாள் ஆகும்.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை  அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது. இதன்படி, தேசிய எம்.எஸ்.எம்.இ விருதுகள்-2023 வழங்குவதற்கு

    1. தொழில்துறை விருது, (அ) உற்பத்தி தொழில்துறை, (ஆ) சேவை தொழில்துறை, (இ) தொழில்களில் சிறப்பு பிரிவு
    2. மாநில விருது,
    3. மாவட்ட விருது, (முன்னேற விரும்பும் மாவட்டங்கள்)
    4. வங்கி விருது,

    ஆகிய 4 பிரிவுகளில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தேசிய எம்எஸ்எம்இ விருது திட்டத்திற்கான செயல்பாட்டு விதிமுறைகளில் நகல் மற்றும் இணையதள விண்ணப்பங்கள் www.dcmsme.gov.in என்ற இணையதளத்திலும், https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspxஎன்ற இணைப்பிலும் கிடைக்கும்.

    இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 10.05.2023

    கூடுதல் விவரங்களை அறிய சென்னை கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ துறையின் இணை இயக்குநரை தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்- 044-22501011/12/13/14, மின்னஞ்சல்-dcdi-Chennai@dcmsme.gov.in)

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments