spot_img
More
    முகப்புசினிமா’’சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன்..!’’ சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சு..?

    ’’சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன்..!’’ சிவகார்த்திகேயனுக்கு என்னாச்சு..?

    ‘’என் அன்பு சகோதர சகோதரிகளே.. சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்’’ என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். அவர், தனது அபாரத்திறமையால் சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

    தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்தநிலையில் சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பதிவில், ’’என் அன்பு சகோதர சகோதரிகளே, டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன், பத்திரமாக இருங்கள்’’ என் படம் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள் என பதிவிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments