spot_img
More
    முகப்புசினிமாதயாநிதி மாறன் மகன் கரண் தொடங்கிய புதிய பிஸினஸ்..! கதைஷார்ட்ஸ் KadhaiShorts

    தயாநிதி மாறன் மகன் கரண் தொடங்கிய புதிய பிஸினஸ்..! கதைஷார்ட்ஸ் KadhaiShorts

    வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை கரண் தயாநிதி மாறன் மே 29 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தினார். அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை கரன் தொடங்கியுள்ளார்.

    ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.

    கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

    பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

    12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.

    2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

    கரண் தயாநிதி மாறன் (Karan Dayanidhi Maran) முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மகன். இவர் தமிழ்நாட்டின் முதல் மற்றும் பிரத்யேக மொபைல் குறுநாடக (Micro-drama) தளமான கதைஷார்ட்ஸ் (KadhaiShorts)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.
    • பிற தொழில்கள்: மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் (University of Manchester) கல்வி பயின்ற கரன், Cloutgency (டிஜிட்டல் மார்க்கெட்டிங்), KKIX (ஸ்னீக்கர் கஸ்டமைசேஷன்) போன்ற புதிய தலைமுறை தொழில்களையும் தொடங்கியுள்ளார்.
    • குடும்ப பின்னணி: கரண் தயாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறனின் மகன் ஆவார். இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பேரனும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கொள்ளுப் பேரனும் ஆவார். சன் குழும தலைவர் காலாநிதி மாறன், கரணின் பெரியப்பா ஆவார்.
    திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் குடும்பத்தில் இருந்து டிஜிட்டல் யுகத்தின் நவீன தொழில் அதிபர் ஆகியுள்ளார் கரன் தயாநிதி மாறன். மொபைல் பொழுதுபோக்கு துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, அடுத்த தலைமுறைக்கான கதைசொல்லலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தனது புதிய வணிகத்தை அமைத்துள்ளார்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments