இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை தொடக்கி உள்ளது. இஎஸ்ஐ-யில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்கள் இந்த வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை வசதியை பயன்படுத்தி கொள்ள சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவை, ahcpesic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது 044-28306398 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்ளலாம். ரத்தம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, இசிஜி, தைராய்டு பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) கழகமானது, இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளிகளுக்காக வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களால் கடந்த மே 7ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது.
இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கான வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை தற்பொழுது சென்னை கே.கே. நகர் மற்றும் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ பெரும்புதூர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதனையொட்டி கடந்த மே 15 ஆம் தேதி சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. மண்டல இயக்குநர் திரு. வேணுகோபால் புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதையும் அதன் சிறப்பு அம்சங்களையும் விளக்கி, 40 வயதுக்கு மேற்பட்ட இஎஸ்ஐ பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகளுக்காக இஎஸ்ஐ மருத்துவமனைகளில் வழங்கப்படும் இந்த இலவச வசதியை பயன்படுத்தும்படி, தொழில் நிறுவனர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வருடாந்திர முகாமில் ரத்தம், கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, இசிஜி, தைராய்டு பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கூட்ட நிகழ்வில் புஷ்பேந்திர கவுதம், இஎஸ்ஐ தமிழ்நாடு மாநில மருத்துவ அதிகாரி, ரஜ்னிஷ் போர்கர், மருத்துவர் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை, வெங்கடேஷ்வர் ராவ், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கி எடுத்துரைத்தனர்.
இஎஸ்ஐ-யில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்கள் இந்த வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை வசதியை பயன்படுத்தி கொள்ள சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவை, ahcpesic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது 044-28306398 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்ளலாம்.

