spot_img
More
    முகப்புசெய்திகள்க்ரைம்'’2,090 கிலோ கஞ்சா பறிமுதல்..!’’ மதுரை காவலர்களுக்கு ரூ1 லட்சம் வெகுமதி வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

    ‘’2,090 கிலோ கஞ்சா பறிமுதல்..!’’ மதுரை காவலர்களுக்கு ரூ1 லட்சம் வெகுமதி வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

    2,090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கி போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பாராட்டு தெரிவித்தார்.

    மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் கடந்த 09.05.2023 அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    விசாரணையில் ஆந்திராவிலிருந்து போலியான பதிவு எண் கொண்ட சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், மேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
    இந்த தகவலையடுத்து விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்த போது சாக்கு மூட்டையில் ரூ. 2 கோடி மதிப்புடைய 2090 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.
    இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு, கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்த காவலர்களை சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பணவெகுமதியும், நற்சான்றிதழும் வழங்கினார். அவர்களுக்கு ரூ.1 இலட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments