spot_img
More
    முகப்புசெய்திகள்’’கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் 2 நாள் மாநாடு..! முதலமைச்சர் அறிவிப்பு

    ’’கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் 2 நாள் மாநாடு..! முதலமைச்சர் அறிவிப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு அக்டோபர் 3, 4 தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 03.10.2023 மற்றும் 04.10.2023 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வர்.

    இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிருவாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்வார்.

    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments