காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ‘ட்வீட்’ வருமாறு:
“வெறுப்பு அரசியலை வெட்டி வீழ்த்தி, வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் முன்னிறுத்தும் சமூக நல்லிணக்க அரசியலை ஆரத்தழுவி அணைத்துக்கொண்ட கர்நாடக வாக்காளர்களுக்கு 140 கோடி இந்தியர்களின் நெஞ்சார்ந்த நன்றி.
வஞ்சகம், வன்முறை, துவேஷம், பொய் அனைத்தையும் ஒற்றை ஆளாய் களத்தில் நின்று வெற்றி கண்ட தலைவருக்கு பாராட்டு” என்று கூறியுள்ளார்.





