”இஸ்ரோ மேற்கொண்ட, ‘செமி கிரையோஜெனிக்’ இன்ஜின் சோதனை வெற்றி..!” ராக்கெட் தொழில்நுட்பத்தில் மைல்கல்

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், 'செமி கிரையோஜெனிக் இன்ஜின்' சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது, ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
282

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.

தற்போது, இந்தியாவில் முதன் முறையாக காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில், செமிகிரையோஜினிக் இன்ஜினின் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை வசதியில், 2,000 கே.என், இடைநிலை கட்டமைப்பில் முதல் ஒருங்கிணைந்த சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தனர்.

‘பவர் ஹெட் டெஸ்ட்’ எனப்படும் இடைநிலை கட்டமைப்பு, உந்துதல் அறையைத் தவிர அனைத்து இயந்திர அமைப்புகளையும் உள்ளடக்கியது. குறைந்த அழுத்தம் மற்றும் உயர் அழுத்த டர்போ- பம்புகள், எரிவாயு ஜெனரேட்டர் மற்றும் கட்டுப்பாட்டு கூறுகள் உட்பட உந்து சக்தி ஊட்ட அமைப்பின் வடிவமைப்பை சரி பார்க்க திட்டமிடப்பட்ட தொடரின் முதல் சோதனை நடந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்