தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிக்கை :
உதவிப் பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல் ) உள்ளிட்ட 45 பதவிகளுக்கான 461 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு Combined Technical Services Examination (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள் (Non – Interview Posts)) க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளப்படி 20.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 27.05.2026 முதல் 25.06.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யூபிஐ மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிக்கையை https://www.tnpsc.gov.in/ என்ற தளத்தில் பார்க்கலாம்.

