ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 7150 பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், அதாவது எந்த டிகிரி முடித்திருந்தாலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (State Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 7150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 396 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அப்ரண்டிஸ் பயிற்சி பணி (Apprentice)
காலியிடங்களின் எண்ணிக்கை: 7150
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.04.2026 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.

மொத்தம் உள்ள 7150 பணி இடங்களில் தமிழ்நாட்டுக்கு 396 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு 18 இடம் உள்ளது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் இருக்கும். எனவே, தமிழ் வழி மாணவ – மாணவியர்களும் இத்தேர்வை புரிந்து கொண்டு எளிதாக எழுதலாம். எஸ்.பி.ஐ வங்கியில் JUNIOR ASSOCIATES என்ற நிரந்தர பணி இடத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் போது, இந்த அப்ரண்டீஸ் பணி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழழங்கப்படும்.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக இருக்கும் காலிப் பணியிடம் | Ariyalur-6,Chengalpattu-15, Chennai-33, Coimbatore-15, Cuddalore-10, Dharmapuri-5, Dindigul-10, Erode-10, Kallakurichi-5, Kanchipuram12, Kanyakumari-12,Karur-5, Krishnagiri-10, Madurai-18, Mayiladuthurai-5, Nagappatinam-10, Nammakal-8, Vellore-6, Villupuram-15, Virudhunagar-10, Nilgiris-10 , Perambalur-5, Pudukkotai-5, Ramanthapuram-5, Ranipet-5, Salem-15, Sivaganga-5, Tenkasi-5, Thenjavur12, ,Theni-10, Thiruvallur-18, Tiruvannamalai-10, Thiruvarur-8, Tiruchirapalli-18, Tiruneveli-12, Tirupathur-8, Tiruppur-10, Toothukudi-15.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்டில் Puducherry-15 இடங்கள், Karaikal -3 இடங்கள் என்று காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.300. எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்: It is mandatory for all Candidates to visit https://bfsissc.com and read the detailed guidelines on how to register on NAPS portal https://apprenticeshipindia.gov.in. It is mandatory for all Candidates to register mandatorily on NAPS portal https://apprenticeshipindia.gov.in before moving on to Applying Online through the link given on the following websites https://www.sbi.co.in/ careers or https://sbi.bank.in/web/careers/current-openings.

