அரசியல், பண்பாடு, ஆன்மீகம், உணவு என்று யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையை நேரடியாக பார்த்து விவரிக்கிறார் எழுத்தாளர் ச.வெங்கடேசன்.
சென்னை விமான நிலையத்தின் உள்ளே A2B காபி
ரூ 250 என்று அதிர்ச்சி அடைந்தோம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தண்ணீர் பாட்டில் ரூ 140
சாப்பாடு ரூ 840
கிலோ அரிசி ரூ 270
திராட்சை கிலோ
ரூ. 2800 என்று விலை கேட்டு அதிர்ந்தோம்
யாழ்ப்பாணத்தில்.

2009 போர் முடிந்து 17 வருடங்கள் ஆனாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு வித இறுக்கம் உள்ளது.
இரவு 7 மணிக்கு கடைகள் அடைக்கப்படுகின்றன.
வழக்கம் போல நல்லூர் கந்தசாமி ஆலயம் மாலை 6.15 மணிக்கு திரைச் சீலை ஆறுமுகர் வள்ளி தெய்வானைக்கு தீபாராதனையோடு நடை சாற்றுகிறார்கள்.
காலை 4.30 க்கு நல்லூர் கந்தசாமி தினமும் தரிசனம் தருகிறார்.
மூலவர் சன்னதியில் திரைச் சீலை மட்டுமே
உள்ளே வேல் உள்ளதாம்
அவல் தேங்காய் பிரசாதம் தந்தார் கந்தசாமி
தலபுராணம் கோவிலில் இல்லை.
டவுனில் பூபால சிங்கம் புத்தக சாலையில் கிடைக்கும் என்றான் கோவில் ஊழியர்.
டொயோட்டா வேனில் விரைந்து ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பூபால சிங்கம் புத்தக சாலை சென்றோம்.
6.30 மணிக்கே கடை அடைத்து விட்டார்கள்.
பலாலி விமான நிலையத்தில் மது போத்தல்கள் இந்திய விலையை விட பாதிக்கும் குறைவாக விற்கப்பட்டது.
எங்கள் மூத்த நண்பரும் இரண்டு போத்தல் (Bottle) வாங்கினார்
இரவுதான் தெரியும்.
அது மது போத்தல் அல்ல வாசனை திரவியம் என்று.
விமான நிலையத்தில் கொழும்புத் தமிழர் பிரசாந்த் தன் சொந்த றொயோட்டோ வானில் எங்களை வரவேற்றார்.
ஆதி மலையாளி.
கேரள பகவதி குலதெய்வம் என்று பல மணி நேரம் கதைத்த பிறகு அறிந்தோம்.
நேரே யாழ் புகையிரத ரயில் நிலையம் அருகே வலம்புரி ஓட்டலில் வந்து சேர்ந்தோம்
மதியம் 2 oo மணிக்கு இங்கு Check out
வரவேற்பாளர் தங்கையிடம் விசாரித்து முக்கால் KM அருகில் உள்ள அக்ஷதயா இந்திய உணவகத்தில் மதிய உணவு உண்டோம்
புஃபே ரூ.840, ரூ.480 என இரண்டு மரக்கறி தமிழ் சாப்பாடு இருந்தது.
எங்கள் நண்பர் ஈழ பரோற்றா , பொறித்த சோறு (fried Rice), தயிர்ச் சோறு வாங்கினார்
பக்கத்து மேசையில் சாப்பிட்ட தம்பதிகள் இந்தியாவா என அன்புடன் கதைத்தனர்.
என்ன சாப்பிடலாம்.
யாழ் நகரில் என்ன பார்க்கலாம்.
2009 முள்ளி வாய்க்கால் போரில் தாங்கள் சிக்கியது.
தற்போது யாழில் வேலை வாய்ப்பு பற்றி எல்லாம் மனம் விட்டு பேசினார்கள்.
எங்கள் நால்வரின் தமிழக பூர்வீகம் பற்றி அன்பாக விசாரித்தனர்.
முன்னதாக யாழ் நகர் வந்த உடனே வண்டியை நிறுத்தினார்கள் உடன் வந்த நண்பர்கள்.
மாவட்ட நீதி மன்றத்தைப் பார்த்ததும் உள்ளே செல்ல விரும்பினர்.
மூவரும் வழக்குரைஞர்கள்.

காவலர் இந்திய Tourist என்றதும் சோதனை போடாமல் உள்ளே அனுமதித்தார்.
ஈழத் தமிழ் சட்ட சொற்களை ரசித்தபடி வாகன தரிப்பிடத்தில் (Parking) இருந்து புறப்பட்டோம்.
மதிய இடைவேளை.
பிணைத் தொகையை தனியர்களே செலுத்த வரிசையில் நிற்பது நம் இளம் இந்திய வழக்குரைஞருக்கு ஆச்சர்யம்.
மாவட்ட நீதிவான் அறையை பார்த்தோம்.
கருப்பு அங்கி இல்லாத ஆண் வழக்குரைஞர்கள
கருப்பு வெள்ளை சட்டை Pant ல் வலம் வந்தனர்.
Sir கழுததில் Neck Collar கூட இல்லை என்றால் இ.இ. வழக்குரைஞர்
இளம் பெண் வழக்குரைஞர் மேலங்கியைப் பார்த்து Sir இது இந்தியாவில் Senior Advocate Robe …. என்றார் நம் தம்பி.

இரண்டு இளம்பெண் வழக்குரைஞர்களிடம் பேச முடியாமல் வாசலில் வந்த வடிவான இளம் வழக்குரைஞரிடம் பேட்டி கண்டார் எம் வக்கீல்.
இருவரும் சிரித்த படி ஆங்கிலத்தில் கதைத்தார்கள்.
பிரிந்து விட்டார்கள்.
பரஸ்பரம் பெயர் மட்டும் பரிமாறி இருக்கிறார்கள்.
நான் என் உள்ளத்தை ஒரு தலையாக தொலைத்தது யாருக்கும் தெரியாது.
சாலையைக் கடந்து பின்னும் அழைத்தார் அந்த ஈழ இளம் வக்கீல்.
நிங்க தமிழோ… ஓம்… மீண்டும் சில நிமிடங்கள் சட்ட வியாக்யானம் இருவரிடமும் நடந்தது.
முதல் நாளை நல்லபடியாக நல்லூர் Lounge உணவகத்தில்
பரோட்டா தோசை
பனீர் மசாலா
புதினா எலுமிச்சை சாறுடன் முடித்தோம்.
நால்வருக்கும் சாப்பிட இலங்கை ரூ 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
Inflation Sir பாவம் அவர்களும் பிழைக்கட்டும் என்றார் மூத்த நண்பர்.
–க. வெங்கடேசன்
யாழ்ப்பாணம்
22.5.2026

