இங்கு வரலாறுகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. எந்த ஒரு துறையாயினும் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்தையும் மாற்றிவிடும்.
கணினி வந்தது; இப்போது அது லேப்டாப், டேப் என மாறிவிட்டது.
MSV சென்றார், பின்னர் இளையராஜா வந்தார்; இப்போது அவரையும் தாண்டி ரஹ்மான் மற்றும் பலர் வந்துவிட்டார்கள்.
MGR சென்றார், பின்னர் ரஜினி வந்தார் (இவர் மட்டும் இன்னும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலைத்து நிற்கிறார்).
கருங்கல் போய் செங்கல் வந்தது; இப்போது அதுவும் மாறிவிட்டது.
கத்தி போய் துப்பாக்கி வந்தது; அது பீரங்கியாகி, இப்போது அணுகுண்டு வரையிலும் வளர்ந்துவிட்டது.
ஓகே, ஓகே… நான் சொல்ல வருவது என்னவென்றால், ADMK, DMK ஆகியவற்றைத் தொடர்ந்து TVK வருகிறது. அது நல்லதா, கெட்டதா என்பது தெரியாது. ஆனால் மாற்றம் என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும்.
சூழ்நிலையைப் புரிந்து, அதற்கேற்ப தங்களை தகவமைத்து தப்பித்து பிழைப்பவர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள். மற்றவை மெதுவாக தேய்ந்து அழிந்துவிடும். இதுவே நியதி.
காலம் மிகவும் கொடூரமானது; அது அனைத்தையும் மாற்றும் பேராசை கொண்டது.

