spot_img
More
    முகப்புபசுமைநிலப்பரப்பும் கடலும் சந்திக்கும் இடம்

    நிலப்பரப்பும் கடலும் சந்திக்கும் இடம்

    நவ்கரின் கரைகளை மென்மையான அலைகள் தழுவ, வந்தனா பாட்டீல் தனது கிராமப்புற கடற்கரையின் ஈரமான மண்ணில், காலைப்  பொழுதில் காலடி எடுத்து வைக்கிறார். ஒரு காலத்தில், நண்டுகளையும், மீன்களையும் கடல் தாராளமாக வாரி வழங்கியதை அவர் நினைவுகூர்கிறார். ஆனால், காலப்போக்கில், அந்த தாராள குணம் மங்கிவிட்டது. “முன்பு, நாங்கள் நண்டு மற்றும் மீன் பிடிப்பது என்பது எதிர்பாராத வகையில் நடைபெற்று வந்த நிலையில், இதர வாழ்வாதார வழிகளைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது,” என்று அவர் தெரிவிக்கிறார். எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலில், பல ஆண்டு கால கவலை, அவரது குரலில் எதிரொலித்தது.

    சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே இதற்குக் காரணமாகும். கம்பீரமாக நிமிர்ந்து நின்ற கடற்கரையின் அந்தப் பசுமைக் காவலர்கள், மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தன. அவற்றின் வேர்கள் நிலத்தை உறுதியாகப் படர்ந்திருக்கவில்லை. அவற்றின் அடர்ந்த கிளைகள், கடல்வாழ்  உயிரினங்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவில்லை. ஒவ்வொரு மரத்தின் அழிவின்போதும், சமூக வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியும் அழிந்து கொண்டிருந்தது. இருப்பினும், நவகரில் உள்ள பலர், சதுப்புநிலக் காடுகளுக்கும், தங்களது வாழ்வாதாரத்திற்கு இடையேயான வலுவான பிணைப்பை அறியாதவர்களாகவே இருந்தனர்.

    பருவநிலைக்கான பசுமை நிதியம்

    ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு முன்முயற்சியின் வாயிலாக மாற்றம் ஏற்பட்டது. மத்திய அரசு, பருவநிலைக்கான பசுமை நிதியம் மற்றும் ஐ நா மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியாவின் கடலோரச் சமூகங்களில், பருவநிலை மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கியது. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று கடலோர மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பருவநிலை மீள்திறன் கொண்ட வாழ்வாதாரங்களை உருவாக்கும் அதே வேளையில், சதுப்புநிலக் காடுகள் உள்ளிட்ட கடல்சார் சூழலைப் பாதுகாப்பதிலும், அவற்றை  மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தியது.

    நவகர், இந்த மாற்றத்தின் அடையாளமாக விளங்கியது. 2021-ம் ஆண்டில், இந்தத் திட்டம், கிராம உறுப்பினர்கள், கிராமப்புற பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஒன்றிணைத்து, ஒரு சதுப்புநிலக் காடுகள் இணை மேலாண்மைக் குழுவை உருவாக்கியது. சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதுமே, இக்குழுவின் இரண்டு முக்கிய  நோக்கங்களாக இருந்தன. பொருளாதார நிச்சயமற்ற சூழலால், பெரும்பாலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    முறையான பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் நிலையான நண்டு வளர்ப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, ஆரோக்கியமான வளர்ப்பு மற்றும் காட்டு நண்டு வளர்ப்புப் பண்ணை போன்ற புதிய வாழ்வாதாரக் குழுக்களை உருவாக்கினர். இந்தக் குழுக்கள் தற்போது இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட கடலோரப் பகுதியில், சேற்றில் வாழும் நண்டுகளை வளர்ப்பதுடன், சதுப்புநிலக் காடுகளை சட்டவிரோதமாக வெட்டுவதிலிருந்தும் பாதுகாக்கின்றன. இதன் தாக்கம் உடனடியாக உணரப்பட்டது.

    சதுப்புநிலக் காடுகள்

    “பிரச்சாரங்கள் மற்றும் இயக்கங்கள் மூலம், சதுப்புநிலக் காடுகள், ஆரோக்கியமான மீன்வளம் மற்றும் வாழ்வாதாரங்களுடனான அவற்றின் தொடர்பு குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்,” என்று அக்குழுவின் தலைவர் ரோகன் பாட்டீல் விரிவாக விளக்குகிறார். “மக்கள் தற்போது அவற்றை தாவரங்களாக மட்டும் கருதாமல், அவற்றை வாழ்வாதாரத்தின் பாதுகாவலர்களாகக் கருதுகிறார்கள்.”

    ஒரு காலத்தில், வறண்டு கிடந்த கடற்கரை, 2023-ம் ஆண்டிற்குள், உருமாறியிருந்தது. சதுப்புநிலக் காடுகள் உயர்ந்து நின்று, நிலஅரிப்பு மற்றும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்தன. அதே சமயம், நீர்நிலைகள் மீண்டும் உயிரினங்களால் நிரம்பி வழிந்தன. இதன் நன்மைகள், சுற்றுச்சூழலையும் கடந்து பரந்து விரிந்தன. “இந்தத் திட்டம் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது,” என்று வந்தனா கூறுகிறார். “முன்பு, பெண்கள் பருவகாலங்களில் மட்டுமே, வேலை செய்து வந்தனர். தற்போது, எங்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, முன்பு நண்டு வளர்ப்பதற்காக நாங்கள் தொலைதூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது,  உள்ளூரிலேயே இதனை மேற்கொள்ள முடிகிறது.”

    சதுப்புநிலக் காடுகள் என்றால் என்ன?

    சதுப்புநிலக் காடுகள் என்பது, வெப்பமண்டல மற்றும் மிதமான வெப்பமண்டல இடைநிலைப் பகுதிகளில் காணப்படும், உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளரக்கூடிய ஒரு தாவர வகையாகும். இவை, 26° செல்சியஸ் முதல் 35°செல்சியஸ் வரையிலான வெப்பம் நிலவும் பகுதிகளிலும், அதிக மழைப்பொழிவு (1,000–3,000 மி.மீ) உள்ள பகுதிகளிலும் செழித்து வளர்கின்றன. சதுப்புநிலக் காடுகள், தண்ணீரைத் தேக்கிவைக்கும் தன்மை கொண்ட மணற்பாங்கானப் பகுதிகள், அதிக உவர்ப்புத்தன்மை மற்றும் அடிக்கடி ஏற்படும் அலைகளின் எழுச்சிகள் போன்ற சூழலைத் தாங்கி வளரும் வகையில்  தகவமைத்துக் கொண்டுள்ள தாவர வகையாகும். அவை முக்கியதத்துவம் வாய்ந்த பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடங்களாகவும், தீவிர பருவநிலை சார்ந்த நிகழ்வுகளுக்கு எதிரான உயிரிப்பாதுகாப்புக் கவசங்களாகவும் செயல்படுகின்றன. மேலும், கிராமப்புற மக்கள் உயிரிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட, தங்கள் வாழ்வாதாரத்திற்காக, சதுப்புநிலக் காடுகளைச் சார்ந்துள்ளனர்.

    சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னேற்றம்

    வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊக்குவிப்பு முயற்சிகள் ஆகிய கலவையின் மூலம், சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய வன நிலை அறிக்கை, 2023-ன் படி, நாட்டில் மொத்தமுள்ள சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 4,991.68 சதுர கிலோமீட்டராக உள்ளது. இது நாட்டின் புவிசார் பரப்பளவில் 0.15% ஆகும். 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ம் ஆண்டில், நாட்டில் உள்ள சதுப்புநிலக் காடுகளின் மொத்தப் பரப்பளவில், 363.68 சதுர கிலோமீட்டர் (7.86%) நிகர அதிகரிப்பும், 2001 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு இடையே 509.68 சதுர கிலோமீட்டர் (11.4%) நிகர அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

    வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊக்குவிப்பு முயற்சிகள் ஆகிய கலவையின் மூலம், சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய வன நிலை அறிக்கை, 2023-ன் படி, நாட்டில் மொத்தமுள்ள சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 4,991.68 சதுர கிலோமீட்டராக உள்ளது. இது நாட்டின் புவிசார் பரப்பளவில் 0.15% ஆகும். 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ம் ஆண்டில், நாட்டில் உள்ள சதுப்புநிலக் காடுகளின் மொத்தப் பரப்பளவில், 363.68 சதுர கிலோமீட்டர் (7.86%) நிகர அதிகரிப்பும், 2001 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு இடையே 509.68 சதுர கிலோமீட்டர் (11.4%) நிகர அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள சதுப்புநிலக் காடுகளில், மேற்கு வங்கம் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இது மொத்தப் பரப்பளவில் 42.45% ஆகும். அதனைத் தொடர்ந்து குஜராத் (23.32%) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (12.19%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2001 மற்றும் 2023-ம் ஆண்டிற்கு இடையே, சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவில், 253.06 சதுர கி.மீ. அளவிலான குறிப்பிடத்தக்க அதிகரிப்பை குஜராத் பதிவு செய்துள்ளது. இதற்குப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடும் இயக்கம், சமூகப் பங்கேற்பு மற்றும் பொது-தனியார் ஒத்துழைப்பு  ஆகியவை காரணமாகும்.

    முக்கிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள்

    • சதுப்புநிலக் காடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,  இந்தியா தொடர்ந்து, சட்டபூர்வ கட்டமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 – ன் கீழ், வெளியிடப்பட்ட 2019-ம் ஆண்டின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை, சதுப்புநிலக் காடுகளை, சூழலியல் உணர்திறன் மிக்க பகுதிகளாக வகைப்படுத்துகிறது. மேலும், சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 1,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில், 50 மீட்டர் இடைப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
    • வளர்ச்சித் திட்டங்களால், சதுப்புநிலக் காடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், 3:1 என்ற விகிதத்தில் ஈடுசெய்யும் வகையில், மீண்டும் மரக்கன்றுகளை நட வேண்டும்.
    • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, இந்திய வனச் சட்டம், 1927, மற்றும் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம், 2002 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ், கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
    • கடற்கரையோர வாழ்விடங்கள்உறுதியான வருவாய்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்தி):
    • நாடு முழுவதும் உள்ள 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில், 540 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், காடுகளை மீட்டெடுக்கவும், காடு வளர்ப்பை ஊக்குவிக்கவும், 2023  ஜூன் 5 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    • தேசிய காடு வளர்ப்பு இழப்பீட்டு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்துடன் ஒருங்கிணைந்த நிதியுதவி மூலம், இந்த முன்முயற்சி செயல்படுத்தப்படுகிறது.
    • 2024–25-ம் நிதியாண்டில், சீரழிந்த 3,836 ஹெக்டேர் பரப்பிலான சதுப்புநிலக் காடுகளைச் சீரமைத்து மீட்டெடுப்பதற்காக, ஆந்திரப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, ரூ 17.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தேசிய கடலோர இயக்கம் – சதுப்புநிலக் காடுகள் மற்றும் பவளப்பாறைகளின் பாதுகாப்பு:
    • இந்த இயக்கம், நாடு முழுவதிலும் உள்ள 38 சதுப்புநிலக் காடுகள் மற்றும் 4 பவளப்பாறைகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் நிதியுதவியாகும்.
    • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற செலவுப் பகிர்மான  மாதிரியில் இது செயல்படுகிறது.
    • சதுப்புநிலக் காடுகளின்  பாதுகாப்பிற்காக, 2021-23-ம் காலகட்டத்தில், ஏழு கடலோர மாநிலங்களுக்கு, ரூ 8.58 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை பசுமை நிதி – இந்தியக் கடலோர சமூகத்தின் கடற்கரையோர நெகிழ்தன்மையை மேம்படுத்துதல் (ஜிசிஎஃப்-இசிஆர்ஐசிசி திட்டம்):
    • ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில், 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • 10,575 ஹெக்டேர் பரப்பளவிலான சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்துப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • 2024-ம் ஆண்டு நிலவரப்படி, 3,114.29 ஹெக்டேர் பரப்பளவிலான சதுப்பு நிலங்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
    • சதுப்புநிலக் காடுகள்: இயற்கையின் கார்பன் பெட்டகம்
    • உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சதுப்புநிலக் காடுகள், வெப்பமண்டலக் காடுகளைக் காட்டிலும், ஏக்கர் ஒன்றிற்கு 7.5 முதல் 10 மடங்கு வரை அதிக அளவிலான கார்பனைச் சேமித்து வைக்கின்றன. அவற்றின் அழிவு, காடுகளை அழிப்பதால் ஏற்படும் உலகளவிலான பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில், 10% பங்களிக்கிறது. இந்தக் கடலோரக் காடுகள், 21 ஜிகா டன்னுக்கும்  அதிகமான கார்பனைக் கொண்டுள்ளன. அதில் 87% அவற்றின் வேர்களுக்குக் கீழ்ப் பகுதியில் உள்ள மண்ணில் தங்கிவிடுகிறது. அழிந்துபோன 1.6 மில்லியன் ஏக்கர் சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுப்பதன் மூலம், கூடுதலாக, 1 ஜிகா டன் அளவிலான கார்பனைப் பெற முடியும்
    • நிலைத்தன்மையை நோக்கிய ஒரு மாபெரும் மாற்றம்
    • நவகரின் உருமாற்றமானது, இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளில் பரவிவரும், ஒரு பரந்த இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இதில், சமூகங்கள் மாற்றத்திற்குத் தங்களை மாற்றியமைத்துக் கொள்வது மட்டுமின்றி, அதனைத் தீவிரமாக வடிவமைக்கவும் செய்கின்றன. ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டு, சீரழிந்து கிடந்த சதுப்புநிலக் காடுகளின் மறுமலர்ச்சி, தற்போது கூட்டுச் செயல்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.
    • அறிவியல், கொள்கை மற்றும் அடிப்படை நிலையிலான பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், சூழலியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான நேரடியான பாதையை இந்தியா உருவாக்கி வருகிறது. வந்தனா பாட்டீல் போன்ற பெண்கள், தற்போது, சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு செயலற்ற சாட்சிகளாக இல்லாமல், தங்களது இயற்கை பாரம்பரியத்தின் செயல்மிகு பாதுகாவலர்களாகத் திகழ்ந்து, வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதுடன், மீள்திறனையும் வளர்த்து வருகின்றனர்.
    • இந்த மாற்றம் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை விட, மேலான ஒன்றைக் குறிப்பதாக உள்ளது. இது, இயற்கை அடிப்படையிலான தீர்வுகள், பருவநிலை நடவடிக்கைகளின் மையமாக உருவெடுக்கும் எதிர்காலத்தை சுட்டிக்காட்டுவதுடன், ஒருகாலத்தில், பாதிப்புக்குள்ளான சமூகங்கள், நீடித்த மாற்றத்தின் முன்னோடிகளாக உருவெடுக்கின்றன.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments