Madras Murasu

ஐராவதம் மகாதேவன் ஆராய்ச்சி உலகில் திருப்புமுனைகளை உண்டாக்கியவர்

ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள் இன்று.

தமிழ்நாட்டில் குடிமைப் பணியின் பின்புலத்தில் இருந்துகொண்டு ஆராய்ச்சி உலகில் திருப்புமுனைகளை உண்டாக்கியவர்களில் முக்கியமானவர் ஐராவதம் மகாதேவன்.

தனது வாழ்நாள் முழுவதும் பண்டைய வரிவடிவங்களை ஆராய்வதற்கு அர்பணித்தார் மகாதேவன்.

அவர் சிந்துவெளி எழுத்துகளிலும், திராவிட மொழியியலும், தமிழ்-பிராமி எழுத்துகளிலும் முன்னோடி ஆய்வுகளைச் செய்துள்ளார்.

அவரது ஆராய்ச்சிகள் சிந்துவெளி எழுத்துகள் தமிழின் தொல்வடிவமாக இருந்திருக்க வேண்டும் என்பதை நோக்கியதாக அமைந்திருந்தன.

அதனை அறிவியல்பூர்வமாகவும் எடுத்துரைத்து வந்தார்.

தற்போது, அதற்கான சாத்தியக்கூறுகள் வெவ்வேறு வழிகளில் மேலெழுந்து வருவதைக் காணலாம்.

குறிப்பாக, தமிழகத்தில் கிடைத்துள்ள பானைக்கீறல்களுக்கும் சிந்துவெளிப் பொறிப்புகளுக்கும் இடையிலான ஒத்தத்தன்மைகள் இன்று அறிஞர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன.

அந்த வகையிலும் ஐராவதம் மகாதேவனின் சிந்தனை முன்னோக்கி இருந்துள்ளதைக் காணலாம்.

நன்றி – ரோஜா முத்தையா நூலகம், சென்னை

Scroll to Top