விண்ணப்பங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மீதமுள்ள காலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவது அவசியம்.
தேர்வு முறை – முக்கிய விவரங்கள்
| பாடப்பிரிவு | கேள்விகள் | மதிப்பெண்கள் |
|---|---|---|
| தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு | 100 | 150 |
| பொது அறிவு | 75 | 112.5 |
| திறனறிவு மற்றும் மனக்கணக்கு | 25 | 37.5 |
| மொத்தம் | 200 | 300 |
-
தேர்வு நேரம்: 3 மணி நேரம்.
-
தேர்வு வகை: கொள்குறி (Objective Type).
-
தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
-
மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்படும்.
தேர்வுக்குப் படிக்க வேண்டிய முக்கியப் புத்தகங்கள்
சமூக அறிவியல் – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை
-
இந்திய வரலாறு
-
தமிழக வரலாறு
-
இந்திய அரசியலமைப்பு
-
புவியியல்
-
பொருளாதாரம்
-
இந்திய விடுதலைப் போராட்டம்
மிக முக்கியமான படிப்புப் பகுதி
அறிவியல் – 6 முதல் 10ஆம் வகுப்பு வரை
-
இயற்பியல்
-
வேதியியல்
-
உயிரியல்
-
மனித உடல்நலம்
-
சுற்றுச்சூழல்
-
அறிவியல் கண்டுபிடிப்புகள்
தமிழ் – 6 முதல் 12ஆம் வகுப்பு வரை
-
இலக்கணம்
-
செய்யுள்
-
உரைநடை
-
ஆசிரியர்கள் மற்றும் நூல்கள்
-
பழமொழிகள்
-
திருக்குறள்
-
இலக்கிய வரலாறு
மேல்நிலைப் பாடப்புத்தகங்கள் – 11, 12ஆம் வகுப்பு
-
இந்தியப் பொருளாதாரம்
-
அரசியல் அறிவியல்
-
வரலாறு
-
இந்திய அரசியலமைப்பு தொடர்பான முக்கியப் பகுதிகள்
கூடுதலாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள்
| பாடம் | பரிந்துரைக்கப்படும் புத்தகம் / ஆதாரம் |
|---|---|
| இந்திய அரசியலமைப்பு | எம். லட்சுமிகாந்த் (M. Laxmikanth) |
| பொது அறிவு | இயர் புக் – மனோரமா, தமிழ் இந்து , அரிஹந்த், |
| திறனறிவு | Quantitative Aptitude – R.S. Aggarwal |
| மனக்கணக்கு | TNPSC Aptitude பயிற்சி வினாக்கள் |
| நடப்பு நிகழ்வுகள் | தினசரி நாளிதழ்கள், மாத இதழ்கள் |
| முந்தைய வினாக்கள் | TNPSC Group 4 Previous Year Question Papers – https://www.tnpsc.gov.in/ |
முக்கியக் குறிப்பு: பல்வேறு வழிகாட்டி நூல்களை வாங்கிக் குவிப்பதைவிட, பள்ளிப் பாடப்புத்தகங்களை முழுமையாகப் படித்து முந்தைய ஆண்டு வினாக்களைப் பயிற்சி செய்வது சிறந்தது.
ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு டிப்ஸ்
தமிழ் – 100 கேள்விகள்
-
6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களைப் படிக்கவும்.
-
இலக்கணப் பகுதிகளுக்கு தினமும் பயிற்சி செய்யவும்.
-
திருக்குறள் – அதிகாரம், பொருள், ஆசிரியர் தொடர்பான விவரங்களைப் படிக்கவும்.
-
நூல்கள், நூலாசிரியர்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பெடுக்கவும்.
-
முந்தைய ஆண்டு தமிழ் வினாக்களைத் தொடர்ந்து எழுதிப் பார்க்கவும்.
பொது அறிவு – 75 கேள்விகள்
-
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளைப் படிக்கவும்.
-
தமிழக வரலாறு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
-
இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தெளிவாகப் படிக்கவும்.
-
புவியியல் வரைபடப் பயிற்சி மேற்கொள்ளவும்.
-
அறிவியல் அன்றாடப் பயன்பாடுகளைப் புரிந்துகொள்ளவும்.
-
கடந்த 6 மாத நடப்பு நிகழ்வுகளைத் தொகுத்துப் படிக்கவும்.
திறனறிவு – 25 கேள்விகள்
-
சதவீதம்
-
விகிதம் மற்றும் விகிதாசாரம்
-
சராசரி
-
காலம் மற்றும் வேலை
-
எண் தொடர்கள்
-
எளிய வட்டி
-
பரப்பளவு மற்றும் கன அளவு
-
தர்க்கரீதியான சிந்தனை
தினமும் குறைந்தது 20 முதல் 25 கணக்குகளைச் செய்து பார்க்க வேண்டும்.
தேர்வுக்கு முன் 45 நாட்கள் படிக்கும் திட்டம்
நவம்பர் 26 முதல் ஜனவரி 9 வரை கீழ்க்கண்ட அட்டவணையைப் பின்பற்றலாம்.
| காலகட்டம் | படிக்க வேண்டியவை |
|---|---|
| நவ. 26 – டிச. 5 | தமிழ் இலக்கணம் + சமூக அறிவியல் |
| டிச. 6 – டிச. 15 | வரலாறு + அரசியலமைப்பு + அறிவியல் |
| டிச. 16 – டிச. 23 | புவியியல் + பொருளாதாரம் + திறனறிவு |
| டிச. 24 – டிச. 30 | தமிழ் முழுப் பயிற்சி + நடப்பு நிகழ்வுகள் |
| டிச. 31 – ஜன. 5 | முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் + மாதிரித் தேர்வுகள் |
| ஜன. 6 – ஜன. 9 | திருப்புதல் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் |
தினசரி படிக்கும் நேர அட்டவணை
மாதிரி தினசரி படிப்பு அட்டவணை
தமிழ்
காலை 6 – 7.30 | 1.5 மணி
பொது அறிவு
காலை 7.30 – 8.30 | 1 மணி
அறிவியல் / வரலாறு
மதியம் 2 – 3 | 1 மணி
திறனறிவு
மாலை 5 – 6 | 1 மணி
நடப்பு நிகழ்வுகள் இரவு 7 – 8 | 1 மணி
முந்தைய வினாக்கள் திருப்புதல் : இரவு 8 – 8.30 | 30 நிமிடம்
தேர்வில் வெற்றி பெற 10 முக்கிய டிப்ஸ்
-
முதலில் அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை முழுமையாகப் படிக்கவும்.
-
தினமும் குறைந்தது 100 கொள்குறி வினாக்களுக்குப் பதிலளிக்கவும்.
-
வாரத்திற்கு இரண்டு முழு மாதிரித் தேர்வுகள் எழுதவும்.
-
தவறான விடைகளுக்குத் தனியாக ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளவும்.
-
தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.
-
6–10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கவும்.
-
நடப்பு நிகழ்வுகளைத் தினமும் படிக்கவும்.
-
OMR விடைத்தாளில் குறியிடும் பயிற்சி செய்யவும்.
-
தேர்வுக்கு முந்தைய வாரத்தில் புதிய புத்தகங்களைத் தொடங்க வேண்டாம்.
-
மூன்று மணி நேரத்திற்குள் 200 கேள்விகளையும் முடிக்கும் வேகத்தை வளர்த்துக்கொள்ளவும்.
அரசு பணியில் சேர வாழ்த்துகள்..!
