இதற்கான பல்கலைக்கழகத்தின் சொந்த நுழைவுத்தேர்வான SNUSAT (Shiv Nadar University Scholastic Aptitude Test) தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே கண்காணிப்புடன் நடைபெறும் (Home-proctored) நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம். 2027 ஜனவரி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
முக்கியப் படிப்புகள்
பல்கலைக்கழகத்தில் பின்வரும் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
-
பொறியியல்: B.Tech Chemical, Civil, Computer Science, Electrical and Computer Engineering, Mechanical Engineering.
-
அறிவியல்: B.Sc. Biotechnology, Chemistry, Physics, Mathematics, Computational Mathematics and Artificial Intelligence.
-
மேலாண்மை: Bachelor of Management Studies (BMS).
-
கலை மற்றும் சமூக அறிவியல்: B.Des., Economics, International Relations, Humanities and Social Sciences.
-
சர்வதேசப் படிப்புகள்: அமெரிக்காவின் Arizona State University உடன் இணைந்த 2+2 பட்டப்படிப்புகள்.
கல்வித்தகுதி
-
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
பெரும்பாலான படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் தேவை.
-
பொறியியல் படிப்புகளுக்கு இயற்பியல், கணிதம் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி அவசியம்.
-
படிப்புக்கு ஏற்ப பாடத்தகுதி மாறுபடும்.
SNUSAT நுழைவுத்தேர்வு முறை
| பிரிவு | கேள்விகள் | நேரம் |
|---|---|---|
| Quantitative Reasoning | 20 | 45 நிமிடங்கள் |
| Logical Reasoning | 20 | 45 நிமிடங்கள் |
| மொத்தம் | 40 | 90 நிமிடங்கள் |
APT தேர்வு:
B.Tech மற்றும் BS Computer Science படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக Academic Proficiency Test எழுத வேண்டும்.
| பாடம் | கேள்விகள் | நேரம் |
|---|---|---|
| கணிதம் | 20 | 30 நிமிடங்கள் |
| இயற்பியல் | 20 | 30 நிமிடங்கள் |
தேர்வு ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே கண்காணிப்புடன் எழுதலாம்.
முக்கியத் தேதிகள் – 2027
| விவரம் | முதல் கட்டம் |
|---|---|
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.12.2026 |
| தேர்வு அட்டவணை தேர்வு செய்ய | 04.01.2027 |
| நுழைவுத்தேர்வு | 10.01.2027 |
| தேர்வு முடிவு | 30.01.2027 |
| கட்டணம் செலுத்த கடைசி நாள் | 09.02.2027 |
இரண்டாவது கட்ட விண்ணப்பக் கடைசி நாள் ஜனவரி 31, 2027. மூன்றாவது கட்டக் கடைசி நாள் மார்ச் 31, 2027.
விண்ணப்பக் கட்டணம் ₹2,500
நுழைவுத்தேர்வு / விண்ணப்பக் கட்டணம் – அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:
