spot_img
More
    முகப்புUncategorizedஅக்ரி டிகிரி, டிப்ளமோ படிப்பு விண்ணப்ப பதிவு ஜுன் 6 கடைசி நாள்

    அக்ரி டிகிரி, டிப்ளமோ படிப்பு விண்ணப்ப பதிவு ஜுன் 6 கடைசி நாள்

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மாணவர் – மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மே 6 ஆம் தேதி தொடங்கி இருக்கும் விண்ணப்ப பதிவு ஜுன் 6 ஆம் தேதி அன்று முடிகிறது.

    அக்ரி (வேளாண்மை – விவசாயம்) இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிக்கையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு :

    வேளாண்மை படிப்பில் சேர, 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட ( Mathematics, Physics, Chemistry, and Biology, Biotechnology/ Microbiology/ Biochemistry/ Computer Science/ Information Technology/ Informatics Practices/ Home Science/ Agriculture/ Horticulture/ Environmental Science) பாடங்களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    1. B.Sc. (Hons.) Agriculture 2. B.Sc. (Hons.) Agriculture – Tamil Medium 3. B.Sc. (Hons.) Horticulture 4. B.Sc. (Hons.) Horticulture – Tamil Medium 5. B.Sc. (Hons.) Forestry 6. B.Sc. (Hons.) Sericulture 7. B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics 8. B.Tech. (Agricultural Engineering) 9. B.Tech. (Agricultural Engineering) – SS (SS – Self-Supporting) 10. B.Tech. (Food Technology) – SS 11. B.Tech. (Biotechnology) – SS 12. B.Tech. (Energy and EnvironmentalEngineering) – SS 13. B.Sc. (Hons.) Agri-Business Management – SS 14. B.Tech. (Bioinformatics) – SS and 15. B.Tech. (Agricultural Information Technology) – SS ஆகிய 15 படிப்புகள் உள்ளன.

    மேலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் www.annamalaiuniversity.ac.in உள்ள B.Sc., (Hons.)Agriculture, B.Sc., (Hons.)Horticulture படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கிகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளிலும் படிக்கலாம்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் அங்கிகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடு ஆகிய பிரிவுகளில் சீட் பெற வேண்டும் என்றாலும் கண்டிப்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பித்து கலந்தாய்வு மூலம் மட்டுமே அந்தந்த படிப்புகளில் சேர முடியும். மே 6 ஆம் தேதி தொடங்கி இருக்கும் ஆன்லைன் https://tnau.ac.in/ விண்ணப்ப பதிவு ஜுன் 6 ஆம் தேடி அன்று முடிகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments