கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்கும் என்று நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறக்க எனது நல்வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள அரசுக்கு, மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

