தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (ஓளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் & திரைக்கதை எழுதுதல், படத்தொகுதிப்பு மற்றும் உயிர்ப்பூட்டல் & காட்சிப்பயன்) பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்காக பயிற்றுவிப்பதற்காக பகுதி நேர கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிட தகுதியுடன் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி:
1. டிப்ளமோ / Bachelor of Visual Arts in respective courses.
2. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றவர்கள்.
அனுபவம்: திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணியாற்றி இருக்க வேண்டும்.
(கல்வி நிறுவனங்களில் திரைப்படம் தொழில் நுட்பம் தொடர்பாக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
ஊதியம்: கருத்தியல் பாடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600, செய்முறைத் பாடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.300 என மாத ஊதியம் அதிகபட்சமாக ரூ.30,000 வரை வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட அனுபவமும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தங்களது உரிய சான்றிதழ்களுடன் சுய விபர படிவத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2023 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்தோர் 90 நாட்களுக்கு உட்பட்டு நியமிக்கப்படுவார்கள்.
முகவரி: முதல்வர் (மு.கூ.பொ) அவர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113 .
B com mudehe eriukura sir