spot_img
More
    முகப்புசெய்திகள்ஆர். சங்கர் சண்முகம் சிறந்த செவிலியர்

    ஆர். சங்கர் சண்முகம் சிறந்த செவிலியர்

    சிறந்த செவிலியருக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஆர். சங்கர் சண்முகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

    சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2026-ம் ஆண்டிற்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை 12.05.2026 வழங்கினார். புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கருணை, அர்ப்பணிப்புணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செயல்படும் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாயளர்களின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

    சவாலான சூழலில சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியர் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டுள்ளார். நோயாளிகளைப் பராமரிப்பதில் உயர்ந்த தரநிலையுடன் அவர்கள் ஆற்றும் அளப்பரிய சேவைகளுக்கும் அயராத முயற்சிகளுக்கும் இந்த விருதைப் பெற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

    சிறந்த செவிலியருக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி செவிலியர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஆர். சங்கர் சண்முகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் கல்வி மற்றும் அது சார்ந்த தொழில்முறை மேம்பாட்டுப் பணிகளில் அவரது 26 ஆண்டுகால சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments