acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை:
சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை வைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது.
ஆனால், தென்னக ரயில்வேயின் தலைமை அதிகாரிகள் அப்படி ஒரு ரயில் இயக்க நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று எனக்கு பதில் கூறியுள்ளனர்.
அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
முன்பெல்லாம் ரயில்வே நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அன்றாட ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தது. கொரோனாவிற்கு பின்பு சிறப்பு ரயில்களை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் என்று பெயர் வைத்து பெரும் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கிறது. பொதுமக்களின் அவசரத் தேவையை அதீத லாபத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறது.
இந்திய ரயில்வேயின் அன்றாட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விட்டார்கள். தட்கல் பிரிமியம் என்று கட்டணத்தை அன்றாட ரயில் வண்டிகளிலும் கடும் உயர்வை ஏற்படுத்தி விட்டார்கள். டிக்கெட் விற்று பெருலாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது.
The post ’’தனியாரின் கைகள், ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’மதுரை எம்ய்ஸ் கேள்வி-க்கு மத்திய அமைச்சரிடம் பதில் இல்லை..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை:
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8, 2023 அன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற அடிப்படையில் விதி எண் 377 வது பிரிவின் கீழ் மதுரை எய்ம்ஸ் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரத் பிரவீன் குமார் (DO No. H 11016/04/2023/PMSSY – III/ 23.09.2023) பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதிலில்லை என்பதுதான் சோகம். மாறாக திரைக்கலைஞர்கள் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைப் போல “ அதே வாழைப்பழந்தான் இது” என்பது போல பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரிவு 377 ன் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் அளவற்ற தாமதம் இருப்பது பற்றி கேள்வி எழுப்பினேன். 2015 – 16 இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம் 2018 டிசம்பரில் ஐந்தாம் கட்ட எய்ம்ஸ் உருவாக்கமாக 6 புதிய எய்ம்ஸ்களில் ஒன்றாக ஓப்புதலை பெற்றது. 2019 இல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணி துவங்கப்படவே இல்லை. 6, 7, 8 வது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டங்கள் கூட குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன. ஆனால், மதுரை எய்ம்ஸ் இன்னும் காகித அளவிலேயே உள்ளன. செப்டம்பர் 2022 இல் முடிந்திருக்க வேண்டிய கட்டுமானப் பணி தற்போது அக்டோபர் 2026 வரை ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பவும் என்ன முன்னேற்றம் என தெரியவில்லை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (Bar Chart) தர இயலுமா? என்பதே பிரிவு 377 இன் கீழ் நான் எழுப்பிய கேள்விகள்.
*பதிலே இல்லாமல் ஒரு பதில்*
அமைச்சர் அளித்துள்ள பதில் நான் கேட்ட எந்த விவரத்தையும் தரவில்லை. மாறாக ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சொல்கிற கதையையே வரி மாறாமல் ஒப்பித்துள்ளார். புதிய மதுரை எய்ம்ஸ் திட்டம் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் டிசம்பர் 2018 இல் ஒப்புதலை பெற்றது. ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி (ஜிகா) கடன் வாயிலாக எய்ம்ஸ் திட்டம் நிறைவேறும் என முடிவு செய்யப்பட்டது. ஜிகா துவக்க நிலை ஆய்வையும் நடத்தி முடித்தது. இதற்கிடையில் 150 படுக்கை கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றை கூடுதலாக திட்டத்தில் இணைத்து மதிப்பீடு 1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. 1627.70 கோடி ஜிகா கடனும், மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஜிகா கடன் ஒப்பந்தம் 26.03.2021 அன்று இறுதி செய்யப்பட்டது. நிர்வாக மற்றும் செலவின ஒப்புதல்களும் பெறப்பட்டன. இப்படியாக 92 சதவீத முன் முதலீடு வேலைகள் முடிந்துள்ளன. எல்லைச் சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. திட்ட செல் ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், நிர்வாக இணை இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர், மின் பொறியாளர், கட்டிட பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டு திட்டத்திற்கான பெரு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.
இது மீண்டும் மீண்டும் கேட்டு புளித்துப் போன கதை. வார்ப்புரு (Template) போல எப்போது கேட்டாலும் 2016 லிருந்து இதே கதையை ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் சுற்றுச் சுவரை கடக்கவே இல்லை என்பதே கசப்பான உண்மை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (Bar Chart) தர இயலுமா? என்ற என் கேள்விகளுக்கு எங்காவது பதில் உள்ளதா?
தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைக்கும் வஞ்சனையை உங்களின் பதில் வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. நாடாளுமன்றத்தில் விதி 377 ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கால வரைபடத்தை கூட தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ள ஒரு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.

The post ’’மதுரை எம்ய்ஸ் கேள்வி-க்கு மத்திய அமைச்சரிடம் பதில் இல்லை..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>புதிய நாடாளுமன்றத்தில் தனது கன்னிப்பேச்சின் போது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:
அவைத் தலைவருக்கு வணக்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை. சந்திராயனுடைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது.
சந்திராயன் 3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று.
உலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவு நோக்கிய பயணம் 7 பயணங்கள் நிகழ முயற்ச்சி நடந்து இருக்கிறது. அதில் நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது மூன்று வெற்றி ஒன்று இந்தியா இரண்டு சீனா. மிகத் துல்லியமான இடத்தை வெறும் அரை கிலோமீட்டர் நீளம் 2 கிலோ மீட்டர் அகலத்தில் மிகச் சரியாக போய் விண்கலத்தை இறக்கிய நம்முடைய விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் இந்த அவையில் காலையில் இருந்து நடக்கிற விவாதம் உண்மையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இது விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு விவாதமா அல்லது வேத புராணங்களை பற்றிய விவாதமா? என்ற குழப்பம் இருக்கிறது. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் புராண இதிகாச கதைகளை அவ்வளவு நேரம் பேசினார் அதை கேட்பதற்கு புதிய பாராளுமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை நான் கேட்க முடியும்.
இப்பொழுது எனக்கு முன்னால் பேசிய ஆளுங்கட்சியினுடைய எம்.பி கூறினார் ’தஞ்சாவூரில் இருக்கிற நூலகத்தில் ஓலைச்சுவடியில் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பு விமானத்தை அனுப்பியதற்கான விவரங்கள் அடங்கிய ஏட்டு சுவடிகள் இருக்கிறது’ என்று சொன்னார். நான் இரண்டு விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதைவிட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் அங்கே இருக்கிறது. ஆனால் அதெல்லாம் கதைகள். வரலாறு கிடையாது அல்லது அறிவியல் கிடையாது. இரண்டாவது அந்த நூலகத்திற்கு கூட மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காமல் வைத்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
இரண்டாவது கேள்வி ஒரு ஓலைச்சுவடி எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அதிகபட்சம், வந்து 1000 ஆண்டுகளுக்குள்ளே தான் எவ்வளவு பாதுகாத்தாலும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
நண்பர்களே, அறிவியல் சூழலில் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். இந்தியாவில் 10 லட்சம் பேரில் 262 அறிவியல் ஆய்வாளர்கள் தான் இருக்கிறார்கள். சீனாவில் அது 2500 பேர் இருக்கிறார்கள். பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் நாம் தான். அதேபோல ஆய்வுக்கு நாம் ஒதுக்குகிற நிதி ஒருவருக்கு 43 டாலர் தான் நம் ஒதுக்குகிறோம். பிரேசில் 173 டாலர் ஒதுக்குகிறது ரஷ்யா 285 டாலர் ஒதுக்குகிறது. அது மட்டுமல்ல இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பல்வேறு ஆய்வுகளுக்கு அது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவியல் துறையில் பணியாற்றுகிற ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒன்றிய அரசு கொடுத்து இருக்கிற நிதி பூஜ்ஜியம். வெறும் செங்கல்லை வைத்து எய்ம்ஸ் படத்தை காட்டுவதைப் போல வெறும் வாய்ச்சவடாலை வைத்து சந்திராயன் படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.
இதனுடைய உச்சமாக இரண்டு விஷயங்களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று எஸ்.எஸ்.எல்.வி கலாம் உருவாக்கிய வகை ராக்கெட். அதற்கான தேவை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இன்றைக்கு எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதாவது லாபகரமான விஷயங்களை தனியார்க்கு கொடுத்துவிட்டு இஸ்ரோவை நட்டத்திலே காட்டுகிற ஒரு வேலை.
விக்ரம்லேண்டர் போய் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ்.எஸ்.எல்.வி தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷனுக்கு அதானி சக்தி என்று பெயர் வைப்பாரா என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகிறேன்.
அதேபோல இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ வேத ஆய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு துவக்கி இருக்கிறது. ஜோதிட ஆய்வு நிறுவனங்களை துவக்கி இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனத்தை கூட ஒன்றிய அரசு துவக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு இந்த அவை பாராட்டுகிற இஸ்ரோவுக்கு இதே ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ஒன்றிய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது “இஸ்ரோ வாய் திறந்து பேசக்கூடாது” என்று. ஜோதிமத் நிலச்சரிவு விஷயத்தில் இஸ்ரோவும் நிலவியல் துறையும் எதுவும் பேசக்கூடாது என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
எப்படி பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டீர்களோ அதே போல இஸ்ரோவுக்கு நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
நண்பர்களே அறிவியல் என்பதும் விஞ்ஞானம் என்பதும் கேள்வியில் தான் பிறக்கிறது.
இந்தியாவினுடைய அனைத்து முன்னேற்றமும் அறிவியல் பூர்வமான பார்வையிலிருந்து உருவானவை. அவற்றையெல்லாம் மறுதலித்து புராணங்களை வரலாறு என்றும் இதிகாசங்களை அறிவியல் என்றும் மீண்டும் மீண்டும் நீங்கள் நிலைநிறுத்த நினைக்கிறீர்கள். அது உங்களை உங்களுடைய பார்வையை மக்களிடம் வந்து அம்பலப்படுத்துவதற்கு தான் உதவி செய்யும்.
எப்படி ஒரு ராக்கெட் விண்ணிலே போகிற பொழுது அது உதிர்த்து கீழே தள்ளுகிற எரிபொருளைப் போல உங்களது பொய்யும் கதைகளும் கீழே விழுகும்.
இந்தியா வரலாற்று ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முன்னோக்கி செல்லும். 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சைக்கிளில் ராக்கெட்டை கொண்டு போன இஸ்ரோதான் இன்றைக்கு செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய முயற்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தொற்று நோயை ஒழிக்க முடியாது என்று உலக நாடுகள் இந்தியாவை சொன்னது.
ஆனால் இன்றைக்கு தொற்று நோயை நாம் முழுமையாக ஒழித்திருக்கிறோம். எருமை பாலிலிருந்து பவுடரை உருவாக்கி இந்த இந்தியாவின் ஊட்டச்சத்தை வளர்த்து இருக்கிறோம். இது அனைத்தும் அறிவியல் பார்வையோடு திடமான ஒரு இந்தியா மூடநம்பிக்கையை தகர்த்து முன்னேறியது. எனவே உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திராயன் பறைசாற்றுகிறது என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
The post ’’உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசியிருக்கிறார்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>மதுரை ரயில் நிலையம் முன் 1999 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 3 டன் எடை கொண்ட மீன் சின்னத்தின் சிலை வைக்கப்பட்டு இருந்தது, 2019 ஆம் ஆண்டு ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக மீன்கள் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட மீன் சின்னங்கள் சிலையை எங்கே வைப்பது என ஆலோசித்து முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில் “மீன் சின்னம் பாண்டிய மன்னர்களின் சின்னம், சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்ட சின்னம், மதுரை மாநகராட்சிக்குள் பொருத்தமான இடத்தில் மீன் சின்னத்தை நிறுவ ஆலோசிக்கப் பட்டது. வெள்ளிக்கிழமையன்று 3 இடங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். ரயில்வே நிர்வாகம் மதரீதியான சின்னங்களை வைக்க அனுமதி மறுக்கிறது. தனித்த அடையாளமாக உள்ள மீன் சின்னத்தை வைப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், மதுரை ரயில் நிலையத்தில் புதிய கட்டுமானம் அமைய உள்ளது. அக்கட்டடத்தில் மதுரையின் அடையாளமான மீன் சின்னத்தை வைக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் 10 ஆண்டு களாக திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் இருந்தது அனைவருக்கும் தெரியும், நூலகத்திற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம், அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் நீதிமன்றம் தலையிட்டு பாரமரிப்பு பணிகளை செய்ய வைத்தது, அதிமுக ஆட்சி காலத்தில் 2016 இல் மதுரையில் 6 கோடி மதிப்பில் நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது, அப்படி நூலகத்தை கட்டி திருவள்ளுவர் பெயரை வைத்திருக்கலாம், கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
The post ’’முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசியிருக்கிறார்..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ’’தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>அதாவது, “நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறு வனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக் கைகள் இந்தியில்தான் இருக்க வேண்டும். அவற்று க்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப் படும் பதில்களும் இந்தியில்தான் இருக்க வேண்டும். அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில்தான் இருக்க வேண்டும்” என்று அலுவலக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தது. இது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
“அரசு நிறுவனமான ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதி எண் 5-ஐ 100 சதவிகிதம் அமலாக்கச் சொல்லி இந்திப் பயன்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால், அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று உள்ளது. ஆனால், பிரிவு 1 (ii)-ஐ தாண்டி, 5-ஆவது பிரிவை பேசும் கபடம் கண்டனத்திற்கு உரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப் பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியை அனைத்து அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வெளி யிட்ட நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சி க்கு அனைத்து மக்களும் பங்களிக்கும்போது, இந்திக்கு மட்டும் ஒன்றிய அரசும், அதன் நிறுவனங் களும் தேவையற்ற முக்கியத்துவம் வழங்கி வருவ தாகவும், இந்தி பேசாத மொழி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து, தனது இந்தித் திணிப்பு சுற்றறிக்கைக்காக ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்’ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம், அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளூர் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கும் ஒரு மாறுபட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள் ளோம்.
நமது மகத்தான நாட்டின் பரப்பளவு முழு வதும் உள்ள செழுமையான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதை கொண்டுள் ளோம். தற்செயலாக, உங்கள் உணர்வுகளை புண் படுத்தியிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.தனது டிவிட்டரில், “தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப் படுத்தி இருந்தால் மனதார மன்னிப்புக்கோருகிறோம். எல்லா மாநில மொழிகளையும் மதிக்கிறோம்” என நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் பதிலளித்துள்ளது என்றும் இந்தி திணிப்பிற்கு எதிரான, அலுவல் மொழி விதிகளில் தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் , A 100%, B 90%, C 55% என்று மாநிலங்களை வகைப்படுத்தி இந்தி அமலாக்க இலக்கு போடும் போது இம் மூன்று வகையிலும் வராத தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப் படும் என்று உத்தரவிடுங்கள். அதுதான் அலுவல் மொழிச் சட்டம் 1 (ii) கூறுவது. இதனை பின்பற்றவில்லையென்றால் அது “ நியூ இந்தியா இன்சூரன்ஸ்” அல்ல “இந்தி இந்தியா இன்சூரன்ஸ்” என்றும் கூறியுள்ளார்.
The post ’’தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி..!’’ சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.
The post ”இது தான் பாஜக..!” சு. வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே விபத்துக்கு காரணம்..!” சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>ஒரிசாவின் பகனகா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பறித்துள்ளது. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்துக்கு ரயில் தடம் புரண்டது, சிக்னல் கோளாறு என்ற இரண்டு வகையான காரணங்கள் வெளியாகி உள்ளன. எது உண்மையான காரணம்
என்பதை கண்டறிய
ஒரு நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரனை செய்வது பாரபட்சமற்றதாக இருக்காது .1998 இல் இதே போன்ற விபத்துக்கள் ஏற்பட்ட போது அன்றைக்கு இருந்த வாஜ்பாய் அரசு நீதிபதி கண்ணா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தது. அது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி காரணத்தையும் தீர்வையும் முன் வைத்தது. எனவே விசாரணை கமிஷன் நீதிபதியின் தலைமையில் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

விபத்துக்கான இரண்டு காரணங்களும் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. முதல் காரணம் ரயில் தடம் புரண்டதாகும். இரண்டாவது விவரப்படி சிக்னல் கொடுக்கப்பட்டும் பாயிண்ட் லூப் லைனுக்கு சென்று அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சிக்னல் கோளாறு .
சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது 2017-ல் ரயில்வே பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர் இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் 4500 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும் ஆனால் நாம் புதுப்பிப்பது 2000 முதல் 2500 கி மீ தான் என்றும் இதனால் புதுப்பிக்க வேண்டிய தண்டவாளங்களின் தூரம் ஏராளமாக நிலுவையில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் விபத்துகளுக்கு வழி வகுக்கலாம். தண்டவாளம் தடம் புரண்டு இந்த விபத்துக்கள் நிகழலாம் என்று கூறினார்.
இவ்வாறு குறைவான தண்டவாளங்கள் புதுப்பிப்பது நிதி பற்றாக்குறையின் காரணமாக தான் என்று அவர் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல ரயில்வே அமைத்த டாஸ்க் போர்ஸ் என்ற அதிகாரிகளின் கமிட்டி சிக்னல் ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் பழுதடைவதாகவும் ஆனால் நூறு தான் புதுப்பிக்கப்படுவதாகவும் அதிலும் ஏராளமான நிலுவை உள்ளதாகவும் அது அறிவித்தது. இதற்கும் போதிய நிதி பற்றாக்குறை தான் காரணம். பல விமர்சனங்களுக்கு பிறகு இந்த அரசு இந்த சொத்துக்களை புதுப்பிக்கும் விதமாக ஒரு தேசிய பாதுகாப்பு நிதியை ஒரு லட்சம் கோடி ரூபாயில் உருவாக்குவதாக அறிவித்தது. ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும் என்றது.

அதில் 5000 கோடி தேய்மான நிதியில் இருந்தும் ஐயாயிரம் கோடி ரயில்வேயின் அன்றாட வருமானத்திலிருந்தும் உருவாக்கப்படும். அதோடு டீசல் மேல் வரியின் மூலம் பத்தாயிரம் கோடியும் உருவாக்கி ஆண்டுதோறும் 20 ஆயிரம் பாலங்கள் பழுது பார்ப்பது உட்பட சிக்னல் தண்டவாளம் ஆகியவை புதுப்பிக்க செலவு செய்யப்படும் என்றார்கள்.
ஆனால் தேய்மான நிதிக்கு 5000 கோடி ஒதுக்காமல் வெறும் 500 கோடியும் 300 கோடியும் தான் ஒதுக்கினார்கள். அதேபோல ரயில்வே அன்றாட வருமானம் 5000 கோடியை திரட்டுவதற்கு போதுமானதாக இல்லை .சென்ற ஆண்டு கணக்கெடுத்து பார்த்தால் நூறு ரூபாய் வருமானம் என்றால் 107 ரூபாய் செலவாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக உண்மை கணக்கை பார்த்தால் நிகர வருமானம் ரயில்வேக்கு கிடைக்கவில்லை.
தலைமை கணக்காயர் தனது ஒரு அறிக்கையில் இந்த பாதுகாப்பு சம்பந்தமான சொத்துக்களை புதுப்பித்தல் வேலைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு நிதி திட்டமிட்டபடி செலவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதனால் ஒன்றிய அரசுதான் இந்த 20 ஆயிரம் கோடியில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடியை ரயில்வேக்கு கொடுக்க வேண்டும். அது கொடுக்காததால் இன்றைக்கு புதுப்பிக்கப்படாத புதுப்பிக்கப்பட வேண்டிய 15 ஆயிரம் கிலோ மீட்டர் தண்டவாளம் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் தடம் புரளலாம் என்கிற நிலையில் உள்ளன.
அதேபோல ஏராளமான சிக்னல்கள் புதுப்பிக்கப்படாமல் கிடக்கின்றன. ரயில்வேயின் லட்சியமாக கூறப்படுவது என்னவென்றால் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான விலையிலான ரயில் பயணம் என்பதுதான் லட்சியம்.
ஆனால் பாதுகாப்பான ரயில்கள் ஓடுவதற்கு ரயில்வேயும் ஒன்றிய அரசும் ஒரு அவசர உணர்வுடன் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன்.

இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட பெட்டிகள் மீதோ சரக்கு ரயில் மீதோ மோதுவதை தவிர்க்கும் வகையில் மோதல் தடுப்பு கருவி அந்த இன்ஜினில் பொருத்தி இருந்தால் அந்த என்ஜின் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த கருவி இந்த வண்டியில் பொருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் (31-3-2022) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில்வே ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மோதல் தவிர்ப்பு கருவியை கவச் என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையின் படி 2022-ல் 65 என்ஜின்களில் தான் அது பொருத்தப்பட்டிருந்தது. டீசல் இன்ஜின்கள் 4800 மின்சார எஞ்சின்கள் 8400 ஆக மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க 65 இன்ஜின்களில் மட்டும் இது பொருத்தப்பட்டது என்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.
இந்த கவலை ஆலோசனை கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எண்ணிக்கை அதிகப்படுத்த தீவிர முயற்சி எடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இப்பொழுது நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த விபத்து காரணம் என்ன என்பதை நீதிபதி கண்டறிவார் என்ற போதிலும் சில முக்கியமான அம்சங்கள் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் அரசு தவறுதான் இதற்கு பிரதான காரணம் என்று தெரிகிறது. டிரைவர்கள் காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் டிரைவர்கள் ஓய்வில்லாமல் வேலை செய்வதாக ரயில்வே வாரிய தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இந்திய ரயில்வேயில் 3 லட்சத்து 12 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தண்டவாள பராமரிப்பு ஊழியர்களான டிராக் மேன்கள் 4 லட்சம் இருந்தது வெறும் 2 லட்சமாக குறைந்துவிட்டது. அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் விடப்படுகின்றன. இதுவும் விபத்துக்கு காரணமாகும் .அது மட்டுமல்ல தங்க நாற்கரம் என்று சொல்லப்படுகிற சென்னை -மும்பை- டெல்லி- ஹௌரா- சென்னை என்கிற பாதை மொத்த தண்டவாளத்தில் 20 சதம்தான்.

ஆனால் இதில் 55 சதமான போக்குவரத்து நிகழ்கிறது. 100 வண்டிகள் செல்ல வேண்டிய இடத்தில் 130 ,150 வண்டிகள் செல்வதாக ரயில்வேயின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே சரக்கு போக்குவரத்துக்கு தனி வழித்தடமும், பயணி வண்டிகளுக்கு தனி வழித்தடமும் அமைக்கப்பட வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு சரக்கு வண்டிகள் சராசரியாக மணிக்கு 25 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. பயணி வண்டிகள் சராசரியாக 50 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து தேசிய சரக்கு போக்குவரத்தில் 27 சதமானம் தான் ரயில்வேயில் செல்கிறது. இதனை சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் பயணிகள் வேகம் 130 கிலோமீட்டர் ஆகவும் சரக்கு போக்குவரத்தில் ரயில் பங்கு 45 சதமானமாகவும் தேச நலனின் அக்கறை கொண்டு செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
உதாரணமாக, 13 லட்சத்து 69 ஆயிரம் கோடியில் 4 ஆண்டுகளில் நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் பைப் லைன் அறிவிக்கப்பட்டது. அது 30% கூட நிறைவேற்றப்படவில்லை .அது முடிவதற்குள் தேசிய ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 2021 முதல் 51 வரை 30 ஆண்டு திட்டமாகும். இதற்கு 38 அரை லட்சம் கோடி முதலீடு வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அது 2021 -222 முதல் அமுல்படுத்தப்பட வேண்டியது. ஆனால் இந்த ரெண்டு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள். அது எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது என்பதை பற்றி ரயில்வே பட்ஜெட்டிலோ அல்லது பொருளாதார ஆய்வு அறிக்கையிலோ நியாயமான நேர்மையான பரிசீலனையோ கிடையாது. இந்த திட்டங்கள் நிறைவேறினால் தான் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான வண்டிகளை இயக்க முடியும்.

தினம் ஒரு வந்தே பாரத் வண்டியை பிரதம மந்திரியே நேரடியாக திறந்து வைக்கிறார். இந்த வண்டிகள் சராசரி வேகம் 85 கிலோ மீட்டருக்கு மேல் கிடையாது. இந்த வண்டிகளை இயக்கவும் பல உள்ளூர் வண்டிகள் ஓரங்கட்டப்படுகின்றன. வேக வண்டிகள் இயக்க வேண்டும் என்றால் லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு ரயில் மேம்பாலம் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். அதேபோல தண்டவாளத்தின் இருமருங்கிலும் சுவர் எழுப்பப்பட வேண்டும். அனைத்து இன்ஜின்களிலும் கவரச் என்ற மோதல் தடுப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் .இது எதுவும் இல்லாமல் வந்தே பாரத்தையும் விரைவு வண்டிகளையும் விளம்பரத்துக்காக விடுவது பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
இந்த திட்டங்களுக்கு எல்லாம் நிதி தனியாரிடமிருந்து வரும் என்று 30 ஆண்டுகளாக சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் தனியார் தண்டவாளம் போட்டு ரயில் ஓட்டிக்கொள்ள வர தயார் இல்லை. தேசிய பணமாக்கும் திட்டத்தில் ரயில் வண்டிகளையும் ரயில் நிலையங்களையும் தண்டவாளங்களையும் தனியாருக்கு குத்தகை விட திட்டம் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க கூறினார்கள்.
ஆனால் அதற்கும் யாரும் வர தயார் இல்லை. அடித்தள கட்டுமானம் சரியாக இல்லாத நேரத்தில் எந்த தனியாரும் முன் வர தயார் இல்லை. எனவே வேக வண்டிகளாகட்டும் அல்லது தனியார் வண்டிகள் ஆகட்டும் எதுவானாலும் அடித்தள கட்டுமானம் நிறைவு செய்யாமல் எதுவும் நடக்காது. இந்த அரசு அரசு முதலீடு செய்ய தயார் இல்லை.
எனவே, சரக்கு போக்குவரத்து 45 சதமானம் ரயிலில் செல்வதும் சாத்தியமில்லை. சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. பயணி வண்டிகளின் வேகம் 130 கிலோ மீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. விபத்தற்ற ரயிலும் சாத்தியமில்லை. எனவே நான் இந்த அரசை ரயில்வேயில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
விலை மதிக்க முடியாத மனித உயிர்களை மேலும் இழக்க தயாராக வேண்டாம் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
The post “பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதே விபத்துக்கு காரணம்..!” சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு first appeared on Madras Murasu.
]]>The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>சேதமடைந்த சொத்துக்களுக்கு உரிய நிவாரனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட செல்வகுமார் (32), மணிமுத்து (32), குமார் (39), பழனிக்குமார் (35) ஆகியோர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை சி பி எம் மாவட்ட செயலாளர் மா. கனேசன், தீ.ஒ. முன்னனி மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, மாவட்டச் செயலாளர்கள் செ.முத்துராணி (புறநகர்) ம.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம், மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ்கண்ணா, சரவணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பபினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினேன்” என்று கூறியுள்ளார்.
The post “தலித் மக்கள் மீது தாக்குதல் – குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை தேவை..!” சு.வெங்கடேசன் எம்.பி., first appeared on Madras Murasu.
]]>The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>சாணக்கியனும் சாவர்க்கரும் அரசதிகாரத்தின் வீறுகொண்ட வடிவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இக்காலத்தில் சனாதனத்திற்கும் வர்ணக்
கோட்பாட்டிற்கும் எதிரான கலைஞரின் பங்களிப்பு தமிழகத்தின் சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள்.
புகழ் வணக்கம்.
#கலைஞர்100
The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.
]]>’திருவாடுதுறை ஆதினம் செங்கோல், முதலில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது. தேவாரம் ஓதப்பட்டது. தமிழ்தான் முதலில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது’ என்று ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது என்றும் அங்கு என்னென்ன படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ள என்பதை வெளியிட்டு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில், சு.வெங்கடேசன் எம்.பி.,கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன். ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக இருக்கவேண்டிய ஓர் இடம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக்
காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளதன் மூலம் இவர்கள் என்ன அரசியலை முன்னெடுக்க உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? எங்கும் சமஸ்கிருத எழுத்துக்களாலும் புராண காட்சிகளாலும் நிரம்பியுள்ளது புதிய நாடாளுமன்றக் கட்டடம்.

கட்டடத்தின் நடுநாயகமாக சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் மிகப்பிரமாண்டமாக விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வார்ப்புக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேருமலையை மத்தாகவும் ஆதிசேஷனைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் பாற்கடலைக் கடையும் காட்சி பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் ஒரு பேரவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் யாரைச் சுட்ட நினைக்கிறார்கள் இவர்கள்?
உண்மையில் அவையின் மையப்பகுதியில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டியது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டக் காட்சிகளாகும். அப்போராட்டத்தின் விளைவாக விடுதலைபெற்ற இந்தியர்கள், தாங்களே உருவாக்கிக்கொண்ட மகத்தான அரசமைப்புச் சட்டமே இந்த அவையையும் இந்த தேசத்தையும் வழிநடத்துகிறது. ஆனால் இதனைக் காட்சிப்படுத்தினால் தங்களின் துரோக வரலாற்றை நாட்டு மக்களுக்கு நினைவூட்டுவது போல அமைந்துவிடும் என்பதற்காக பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, அரசமைப்புச் சட்ட நூல் வைக்கப்பட்டு அதனைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள கலைவடிவங்கள். அசலான அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால் போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்களை மறுஉருவாக்கம் செய்து காட்சிப்படுத்தி உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடிப்படையில் நந்தலால் போஸ் ஓவியங்கள் ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் விதமாக, இந்தியத் தொன்மையையும் வரலாற்றையும் பண்பாட்டையும் முன்னிறுத்தும் முக்கியமான கூறுகளைக்கொண்டுள்ளன.
அந்த ஓவியங்கள் சிந்துவெளிப் பண்பாடு, பண்டைய பல்கலைக்கழகங்கள், முகலாய கட்டக்கலை, சுதந்திரப் போராட்ட வரலாறு, தேச விடுதலைக்காகவும் மதகலவரங்களுக்கு எதிராகவும் அண்ணல் காந்தி எனப் பன்மைத்தன்மை மிக்கதாகவும் சான்றதாரங்களின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. ஆனால் இவர்கள் உருவாக்கியுள்ள இந்த 16 கலைவடிவங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன.

முதலில் இதில் சிந்துவெளிப் பண்பாட்டிற்கு இடம் இல்லை. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதற்கு நேர்மாறாக வேதப் பண்பாட்டிலிருந்து தொடங்குகிறார்கள். இங்கே இதிகாசங்கள் வரலாறாக மாற்றப்படுகின்றன. நந்தலால் போஸ் வரைந்ததில் இதிகாசங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தெளிவாக காவியக்காலம் என்று கூறப்பட்டிருக்கும். வரலாறு என்று சொல்லப்பட்டிருக்காது.
இங்கு இதிகாசம், வரலாறு என்று கூறப்படுகிறது. இதிகாசத்தை வரலாறாகத் திரிக்கும் போக்கிற்கு இது நேரடி அங்கீகாரம் வழங்குவதாக உள்ளது.
வேதங்களில் சபா, சமிதி, சன்சாத் போன்ற சொல்லாடல்களோடு மனித மாண்பினை இழிவுப்படுத்தும் சொல்லாடல்களும் குறிப்பாக மனிதர்களைச் சாதி, வர்ண ரீதியாகப் பிளவுபடுத்தும் சொல்லாடல்களும் காணப்படுகின்றன.

சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் அரசியல் அமைப்பிற்கு வர்ணங்கள் முற்றிலும் எதிரானவை. அவற்றினை மேற்கோளாகக் கட்டுவதும் தற்கால அரசமைப்பு என்பது அதன் நீட்சி என்று கூறுவதும் அரசமைப்பின் மாண்பையும் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் முயற்சி.
சனாதனம் இந்த மண்ணில் உருவாக்கிய எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான பிரகடனமே அரசமைப்புச் சட்டம். சனநாயகம் என்பது முற்றிலும் நவீனகாலச் சிந்தனையாகும். மன்னராட்சியிலிருந்து தன்னைப் பிரித்து, அதனை எதிர்த்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வெளிவந்த செயல்பாடாகும்.

பண்டைய காலத்தில் காணப்பட்ட சபை, சங்கம் முதலியவற்றை சனநாயகம் என்று சொல்வது மீண்டும் பழமைவாத தன்மைக்குத் திரும்புவதாகும். உத்திரமேரூர், உக்கல் கல்வெட்டுகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் நடைபெற்ற விசயங்கள் ஆகும். அவற்றை ஒட்டுமொத்த மக்களுக்கானதாய் பார்க்க முடியாது. அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட இலக்கியங்கள் அரசர்களை மையப்படுத்தியவை.
மக்களுக்கு ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கும் இருந்ததில்லை.
இந்த 16 கலைவடிவங்கள் சனநாயகத்திற்கான வேர்கள் பண்டைய இந்தியாவில் உள்ளன என்பதை எடுத்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அதன்வழி பண்டைய காலத்தில் சனநாயகம் நிலவியதாகக் கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா தனது பண்டைய ஆட்சிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சனநாயகம் என்னும் நவீனகாலச் சிந்தனை அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளைக் கொண்டது. சனநாயகம் அரசாட்சியை எதிர்த்துப் பெற்றதாகும்.
இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் ஆட்சி முறை என்பவை மௌரியர், குப்தர், முகலாயர், மராத்தியர், கலிங்கர், ஆங்கிலேயர், பல்வேறு பழங்குடிகள் ஆகியோரை உள்ளிட்ட எல்லோருடைய கூறுகளையும் உள்ளடக்கிய அதிலிருந்து பரிணமித்த ஓர் ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது. அவை இந்த 16 கலைவடிவங்களில் இல்லை.

பன்மைத்துவங்கொண்ட நந்தலால்போஸ்ஸின் படைப்பினை அழித்து, அதற்கு மாறாக பண்டைய வேத காலத்தில் சனநாயகம் நிலவியது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்கியுள்ளனர். இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்கு ஓர் அங்கீகாரம் வழங்குவதும் நேரடியாக இந்துத்துவா அரசியல் கோட்பாட்டை நிறுவும் அப்பட்டமான முயற்சியாகும்.
அவர்களின் கட்சி அலுவலகத்தில் நிறுவிக்கொள்ள வேண்டியனவற்றை நாட்டின் பேரவையான நாடாளுமன்றத்தில் நிறுவியதென்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரான செயல். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் இந்துத்துவா கோட்பாடுகளால் இந்த அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில், மன்னராட்சியின் அடையாளமான செங்கோலைக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களோடு மட்டும் இந்த நாடாளுமன்றம் திறக்கப்படவில்லை, இந்த மொத்தக் கருத்தியலைக் கொண்டுதான் இது உருவாக்கப்பட்டுள்ளது.

The post ’’புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கிறது..?” சு.வெங்கடேசன் எம் பி., ’லைவ்’ ரிப்போர்ட் first appeared on Madras Murasu.
]]>