acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131The post ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துரை வருமாறு:
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழா கொண்டாடுவதையும், அதற்காக மிகச் சிறப்பான நினைவுத்தொகுப்பு வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
இந்த நிகழ்ச்சிக்காக அவரது குடும்பத்தின் சார்பில் என்னிடம் அழைப்பிதழ் தந்தார்கள். ராமமூர்த்தி எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை தாண்டி எங்கள் குடும்ப நண்பர் என்று தான் முதலில் சொல்ல வேண்டும்.
மருத்துவர் ராமமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்டகால நட்பு உண்டு. தலைவர் கலைஞர் அவர்களும், மருத்துவர் ராமமூர்த்தி அவர்களும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டால், இளமைக் கால நண்பர்கள் பேசிக் கொள்வதைப் போல இருக்கும்.
தலைவர் கலைஞரின் இலக்கிய ஆளுமை, எழுத்துநடை, ஆட்சி நிர்வாகத் திறன் மீது டாக்டர் ராமமூர்த்தி பெருமதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் மீது மட்டுமல்ல, என் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர் தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டவர் டாக்டர் ராமமூர்த்தி.
மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் வீட்டிற்கே வந்து வாதாடினார். எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்று முதலமைச்சர் கலைஞர் அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார்.
மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார்.
மிகப் புகழ்வாய்ந்த, நாட்டுப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த ராமமூர்த்தி, தனக்கெனத் தனிப்பாதையைத் தேர்ந்தெடுத்ததோடு, அதில் தனிச்சிறப்பான இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். உயிர்காக்கும் துறையான மருத்துவத்துறையில், நரம்பியல் துறை வல்லுநராக – இந்தியாவின் முகமாகவே உலகம் முழுதும் அறியப்பட்ட சிறப்புக்குரியவர் டாக்டர் ராமமூர்த்தி. இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை இயலின் தந்தை என்றே போற்றப்பட்டவர்.
டாக்டர் ராமமூர்த்தி உலகம் முழுதும் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். உலகெங்கிலும் இருந்து வல்லுநர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். நரம்பியல் துறையிலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவிலும் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
புதிய பிரிவுகளை நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார்.
மருத்துவத்துறை முன்னோடியாகவும், மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த டாக்டர் ராமமூர்த்தி நூற்றாண்டில் அவரது வாழ்வும் பணியும் சிறப்பான முறையில் நினைவுகூரப்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்.
நன்றி, வணக்கம்.
The post ’’தலைக்கவசத்தை கட்டாயமாக்க வாதாடியவர் டாக்டர் ராமமூர்த்தி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ”அண்ணன் இருக்கின்றார்..!” முத்தமிழறிஞர் கலைஞர் first appeared on Madras Murasu.
]]>அண்ணன் இருக்கின்றார்!
சந்தனமே!
தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்காற்றே!
நந்தாச் சுடர் விளக்கே!
நறுமணத்துப் புதுமலரே!
கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப்பாடெனும்
பண்பைக் கண்போலக் காத்திடற்குக்
கற்பித்த பெருந்தகையே!
சிங்கத் தமிழர்களின் சிந்தையெலாம் பறிகொண்டு
வங்கக் கடலோரம் வாய்மூடிக் கண்மூடி
மோனத் தவமிருக்கும் முத்தமிழே!
குடிசையெலாம் மேலுயர்ந்து
கோபுரமாய் விளங்கிடவும்
மடமையிருள், கொல்வறுமை
மடிந்தே மருகிடவும்
எல்லாரும் நலனெல்லாம்
எய்தி மகிழ்ந்திடவும்
நல்லதோராட்சியினைத்
தோற்றுவித்த நாயகமே!
எண்ணக் குறிப்பறிந்தே
ஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!
எனையிங்கே ஆளாக்கிக்
காத்திட்ட ஆருயிரே!
நும்கனவு அத்தனையும் நனவாக்கும்
சீரியநற் பணியினையே செய்கின்றோம்
நாள்தோறும்!
செய்பணிகள் அனைத்திலுந்தான்
அண்ணனே! நீ இருக்கின்றாய்!
-– என்றே எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர்! காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா,
உதயமான நாள் செப்டம்பர் 15 அன்று. அது இன்று!
முதன் முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் தனது கன்னிப் பேச்சில் கனல் தெறிக்க ஒரு கருத்தைச் சொன்னார்கள். “நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்று நீங்கள் அறிவீர்கள். இந்தச் சபையும் அறியும். நாங்கள் ஒரு விசித்திர அரசியல் கூட்டத்தினர் என்றால் எங்களைத் தோற்றுவித்ததும் இந்த நாட்டிலுள்ள ஒரு விசித்திரமான தலைமைதான் என்பதை யாவரும் உணர வேண்டும். விசித்திரமான நிலைமைகள்தான் விசித்திரமான கட்சிகளை ஏற்படுத்துகின்றன” என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்னொன்றையும் சொன்னார் அண்ணா தொலைநோக்குப் பார்வையுடன். “இந்த சபைக்கு நாங்கள் வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்” –- என்று அண்ணா அவர்கள் சொன்ன நாள்: 4.7.1957. எண்ணி பத்தே ஆண்டில் அரியணையில் அமர்ந்துவிட்டார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இன்று வரை ‘தமிழ்நாடு’ என்ற பெயரே அச்சம் தருவதாக இருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் என்பதை வரையறுத்தார். இந்தித் திணிப்புக்கு தடுப்புச் சுவர் அப்படியே இருக்கிறது. இன்று மற்ற மாநிலங்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்றார் அண்ணா. கடந்த வாரம் கூட உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் அண்ணா!
அண்ணா மறைவுற்ற போது பெரியார் சொன்னார்: ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்று! இந்த சொற்களுக்குள்தான் எத்தனை பொருள்? அண்ணா இருப்பதைப் போலவே கொள்கை இருக்க வேண்டும், கோட்பாடு இருக்க வேண்டும், கழகம் இருக்க வேண்டும், கண்ணியம் நிலைக்க வேண்டும், கட்டுப்பாடு காக்க வேண்டும், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்தது தான், ‘அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்பது ஆகும்.
கலைஞராட்சி, அண்ணாவின் ஆட்சியாக அப்படியே தொடர்ந்தது. மாநில சுயாட்சி இல்லையே என்று வருந்தினார் அண்ணா. மாநில சுயாட்சியை இந்திய அரசியலுக்குள் கொண்டு சென்று அதனை நிலைநிறுத்த அயராது உழைத்தார் கலைஞர். மாநில சுயாட்சித் தீர்மானம் போட்ட முதல் இந்திய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார் கலைஞர். மாநிலக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு ஒன்றிய அரசு செயல்படும் நிலையை உருவாக்கினார். கூட்டணி ஆட்சி என்பது கூட்டாட்சியாகவும்– மாநில சுயாட்சியை உயிர்ப்பிப்பதாகவும் ஆக்கினார் கலைஞர். சமூகநீதிக் கோட்பாட்டை இந்தியவியல் கோட்பாடாக மாற்ற – மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வைத்தார் கலைஞர்.
மாநிலக் கட்சிகள்தானே, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தானே, ஒரு மாநிலக் கட்சித் தலைவர்தானே என்ற ஏளனப் பேச்சை அகற்றி, ‘மாநிலக் கட்சித் தலைவர்களே, அகில இந்தியத் தலைவர்களாக வலம் வரலாம்’ என்ற நிலையை கலைஞர் உருவாக்கினார். வடக்கின் தராசை கொஞ்சம் இறக்கி, தெற்கின் தராசை கொஞ்சம் உயர்த்தி -– ஒன்றிய முள்ளின் முனையை கொஞ்சம் மழுக்கிக் காட்டினார் கலைஞர். ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்தார் கலைஞர்!
அந்த உருவாக்கத்தின் இன்றைய செயல்வடிவமாக திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் உருவான கூட்டணி பாணியை அகில இந்தியாவுக்கும் விரித்தார் இவர். ‘கரும்பு ஆலையில் மீண்டும் மீண்டும் பிழிவதைப் போல ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் பிழிய வேண்டும்’ என்று கூட்டணிக்கான பாணியைச் சொன்னார் அண்ணா. செய்து கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர். ‘இந்தியா’ கூட்டணியின் விதை மட்டுமல்ல, பதியமும் இங்கே போடப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடுத்துச் சென்று நட்டுவிக்கப்பட்டது. இனி தோப்பாகும்.
அண்ணாவே நினைத்துப் பாராத உச்சம் இது!
‘திராவிட மரபினத்தைச் சார்ந்தவன் நான்’ –- என்று சொன்னார் அண்ணா. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரே அச்சமூட்டுகிறது. ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றார் கலைஞர். ஜாதி வேறுபாடு மட்டுமே அவரால் நீக்க முடிந்தது. இதோ பெண் ஓதுவார்கள் பாடும் காட்சியைப் பார்க்கும் போது பால் பேதமும் பஞ்சாய் பறக்கிறது. தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றும் வண்ணம் ஒரு கொள்கையாட்சியை நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர். ‘மதறாசி’ போய்விட்டது இப்போது. ‘இப்படி ஒரு முதலமைச்சர் வேண்டும்’ என்று வங்காளத்திலும், மலையாளத்திலும் தெலுங்கிலும் குரல் கேட்கிறது. ‘விசித்திரமான நிலைமைகளை மாற்ற வந்த விசித்திரமான கட்சி’ என்பதை நிரூபித்து வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்!
தொடக்கத்தில் சொல்லப்பட்ட கவிதைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வைத்த தலைப்பு: ‘அண்ணன் இருக்கிறார்’. ஆமாம்! அண்ணன் இருக்கிறார். வாழ்கிறார். ஆள்கிறார்.
அண்ணா வாழ்க!
அண்ணா ஆட்சி தொடர்க!
The post ”அண்ணன் இருக்கின்றார்..!” முத்தமிழறிஞர் கலைஞர் first appeared on Madras Murasu.
]]>The post ’’தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>இந்த இனிய மாலை வேளையில் முத்தமிழ்ப் பேரவையின் 42-ஆம் ஆண்டு விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுதோறும் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துவதுண்டு. அதை வழக்கமாக, வாடிக்கையாக வைத்திருந்தவர் நம்முடைய இயக்குநர் திரு. அமிர்தம் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற பிறகு, ஆண்டுதோறும் என்னை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் இந்த நிகழ்ச்சிக்கு தேதி கேட்கிறாரோ இல்லையோ – நான் வழக்கமாக ஆண்டுதோறும் ஒரு தேதியை தருவதென்று முடிவெடுத்து அதை குறித்துக் வைத்துக் கொள்வதுண்டு.
ஏன் என்றால், இயக்குநர் அமிர்தம் அவர்களிடத்திலே எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல இடங்களிலே இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். அப்பாவிடத்திலே கூட அடி வாங்கியது கிடையாது. அவரிடத்திலே அடி வாங்கியிருக்கிறேன். அதை இன்றைக்கும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு என்னை கண்டிப்போடு வளர்த்தவர் மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம். தொடர்ந்து அவர் ஆற்றிவரும் முத்தமிழ்த் தொண்டிலே என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு நானும் தவறாமல் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதுண்டு.
முதன் முதலில் 1975 -ஆம் ஆண்டு வழுவூர் இராமையா அவர்களைத் தலைவராகவும், குளிக்கரை பிச்சையா அவர்களைச் செயலாளராகவும், தஞ்சை தியாகராஜன் அவர்களைப் பொருளாளராகவும் இணைத்து உருவாக்கப்பட்டது இந்த முத்தமிழ்ப் பேரவை. இந்தப் பேரவைக்கு இயக்குநர் அமிர்தம் அவர்கள், தற்போது செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். தலைவராக ஜி.ராமானுஜம் பொறுப்பேற்றுக் கொண்டு செயலாற்றி வருகிறார். தொடர்ந்து இத்தனை ஆண்டு காலமாக இந்தப் பேரவை சிறப்பாகச் செயல்பட்டு வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று. அதற்காக நான் மனந்திறந்து உங்கள் அனைவரின் சார்பிலே அத்தனை பேரையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகமிக எளிது. ஆனால் அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நடத்துவது என்பதுதான் மிகவும் அரிது. வள்ளுவர் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கேற்ப முத்தமிழ்ப் பேரவையை உருவாக்கி அதனை நம்முடைய மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம் கையில் தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர் கலைஞர் ஒப்படைத்திருக்கிறார்.
தலைவர் கலைஞரை பார்த்து வளர்ந்தவர் அவர். தலைவர் கலைஞரால் வளர்க்கப்பட்டவர் அவர். தலைவர் கலைஞர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் அமிர்தம். பூம்புகார், பூமாலை, மறக்கமுடியுமா என 1964 முதல் 1994 வரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து பணியாற்றியவர் தான் மதிப்பிற்குரிய அமிர்தம். திரைப்பட இயக்குநராக – திரைப்படத் தயாரிப்பாளராக பன்முக ஆற்றலை கொண்டவர் நம்முடைய அமிர்தம். முத்தமிழ்ப் பேரவையுடன் சேர்த்து திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கம் என்ற இந்த கலையரங்கத்தையும் எழுப்பியவரும் அவர்தான்.
இசை விழாவுடன் சேர்த்து, ஆண்டுதோறும் விருதுகளை வழங்குவதை முத்தமிழ்ப் பேரவை வழக்கமாக வைத்திருக்கிறது. முத்தமிழ்ப் பேரவையில் விருது பெறாத தலைசிறந்த கலைஞர்களே இல்லை எனும் அளவுக்கு, அவர்களைக் கண்டறிந்து, விருதுகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது. முத்தமிழ்ப் பேரவை விருதை பெற்றோம் என்று சொல்வதே பெருமைக்குரியதாக அமைந்துவிட்டது இப்போது. அந்த வகையில் இந்த 42-ஆவது ஆண்டு விழாவில்,
* இயல் செல்வம் விருது பெற்றிருக்கக்கூடிய நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் எஸ்.ராஜா அவர்களைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் அவருடைய ரசிகன். பட்டிமன்றத்தில் திருமதி பாரதி பாஸ்கருடன் ராஜா மோதிக் கொள்ளும் காட்சியை பார்த்து ரசிப்பதுண்டு. சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் தூண்டக்கூடிய பேச்சுக்கு சொந்தக்காரர் நம்முடைய ராஜா. எத்தனை பேருக்குப் பின்னர் பேசினாலும் முத்திரை பதிக்கக் கூடிய அளவிற்கு பேசக்கூடியவர் நம்முடைய ராஜா. இதுதான் முதல் முதலில் நான் பெறும் விருது என்று அவரே சொன்னார். முதன் முதலாக அதுவும் என் கையால் விருது பெறுகிறார் அவர், அதில் எனக்கு ஒரு பெருமை. இயல்செல்வம் விருதை அவர் பெற்றிருப்பது பொருத்தமான ஒன்று.
* இசைச் செல்வம் விருது பெற்றுள்ள மகதி அவர்கள், இசையுலகில் இளம் புயலாக வலம் வரக் கூடியவர். இரண்டு வயதிலேயே ராகங்களை சரியாகச் சொல்லும் ஆற்றலைப் பெற்று, மூன்று வயதிலேயே மேடையேறிப் பாடியவர்.
* திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் பெயரிலான ராஜரத்தினா விருதை இஞ்சிக்குடி இ.பி.கணேசன் அவர்கள் பெற்றிருக்கிறார். இவரும் இவரது சகோதரரும் இணைந்து 15 வயதில் இருந்தே, இசை உலகில் வலம் வருகிறார்கள். இந்தியா முழுவதும் சென்று வாசித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே இவரது இசை ஒலித்துள்ளது. இஞ்சிக்குடி சகோதரர்கள் என்று பெயர் பெற்றவர் அவர்.
* இந்த ஆண்டுக்கான நாட்டிய செல்வம் விருது வழுவூர் பழனியப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டிய உலகில் வழுவூரார் பாணிக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய வழுவூர் பாணி என்ற நாட்டிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர் தான் நம்முடைய பழனியப்பன் அவர்கள். தன்னைப் போலவே பல மாணவர்களை உருவாக்கி வரும் புகழ்பெற்ற நடன குருவாகவும் அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* வீணைச் செல்வம் விருது பெற்ற ராஜேஸ் வைத்யா அவர்கள், உலகப் புகழ் பெற்ற வீணைக் கலைஞராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இசையுலகில் மட்டுமல்ல, திரையுலகிலும் அவர் தனது வெற்றிக் கொடியை நாட்டி இருக்கிறார். “Do you have a Minute” என்ற பெயரில், அழகிய திரைப்பாடல்களைத் தனது வீணையில் மீட்டி, இவர் ட்விட்டரில் பதிவிட்டு வருவதை இரசிக்காதோர் இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமானவர் அவர்.
* இந்த ஆண்டுக்கான தவில் செல்வம் விருது பெற்ற இடும்பாவனம் கண்ணன் அவர்கள் – 44 ஆண்டுகளாக தவில் வாசித்து வருகிறார். இந்த முத்தமிழ்ப் பேரவையின் வயது, இவரது கலைத்துறை அனுபவத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
– இத்தகைய ஆற்றல் மிக்கவர்களை, அனுபவம் மிக்கவர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கி, அவர்களின் கலை ஆளுமையை அங்கீகரித்திருக்கக்கூடிய முத்தமிழ்ப் பேரவையை நான் உள்ளபடியே மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். ”பிற விழாக்களில் பெறுகின்ற பட்டங்களும் – விருதுகளும் தங்கச் சிம்மாசனத்திலிருந்து பெறுவது போலிருக்கலாம். ஆனால் முத்தமிழ்ப் பேரவையில் பெறும் விருதுகள் தாயின் மடியிலிருந்து பெறும் இனிமை போன்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய விருதை நீங்கள் எல்லாம் பெற்றிருக்கிறீர்கள்.
முத்தமிழ்ப் பேரவை விருது பெற்றதை நீங்கள் பெருமையாக நினைப்பதைப் போலவே – உங்களுக்கு விருது வழங்கியதை முத்தமிழ்ப் பேரவையும் பெருமையாகக் கருதுகிறது. உங்களுக்கு என்னுடைய கையால் விருது வழங்கியதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். இந்தத் தருணத்தில், ஒரு வேண்டுகோளை முத்தமிழ்ப் பேரவைக்கு வைக்கலாம் என நினைக்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். முத்தமிழுக்குச் சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு -முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதும் தனியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் இயக்குநர் அமிர்தம் மீதான உரிமையின் காரணமாக நான் கோரிக்கை வைக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் எழுதாத எழுத்துகள் இல்லை. பாடல்களை – கவிதைகளை எழுதிக் குவித்தவர் அவர். நாடகங்களை எழுதினார்; நடித்தார். பாடல்கள் பாடியதில்லையே தவிர, அதன் ராகங்கள், நுணுக்கங்களை அறிவார். இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் முத்தமிழ்ப் பேரவையின் முகப்பில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 2.1.2020 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் சிலையினை நான் திறந்து வைத்தேன். அது தனிப்பட்ட கலைஞரைப் பெருமைப்படுத்துவதற்காக அல்ல, அவர் மூலமாக முத்தமிழை வளர்ப்பதற்காகத்தான். இன்றைக்கு அவர் பெயரால் மதுரையில் உலகத்தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் – அவர் பெயரால் சென்னை கிண்டியில் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றால் -அதன் மூலமாக மக்களே அந்தப் பயனை அடைகிறார்கள். கலைஞரை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத் தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது. தமிழினத்தை காப்பாற்றுவது. ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான். அதை புரிய வைக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
இது போல ஏராளமான இசை விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடக்கவேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும்.
ராஜாவைப் போன்ற பேச்சாளர்கள் – மகதி, ராஜேஸ் வைத்யாவைப் போன்ற இசைக்கலைஞர்கள் – ஏராளமாக உருவாக வேண்டும். அப்படி உருவானால்தான் பல்லாயிரம் ஆண்டு தமிழை, இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்குக் காப்பாற்ற முடியும்.
அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியல் தொண்டு மூலமாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். அதே போல கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், உங்கள் துறை மூலமாக தமிழ்க் கலை வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
விருது பெற்றிருக்கும் அனைவரையும் இந்த முத்தமிழ்ப் பேரவையின் சார்பில், இன்றைக்கும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் சார்பில் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
நன்றி வணக்கம்!
The post ’’தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் அமைச்சர்கள் தலைமையில் 12 குழு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு first appeared on Madras Murasu.
]]>முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி ‘தமிழினத் தலைவர்’ கலைஞரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்திட வேண்டும். பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அமைய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 2.6.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.

முத்தமிழறிஞர் கலைஞர், பல்வேறு திறமைகள் கொண்ட பன்முக வித்தகர். அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில்
இதழாளர் – கலைஞர்
எழுத்தாளர் – கலைஞர்
கலைஞர் – கலைஞர்
சமூக நீதிக் காவலர் – கலைஞர்
பண்பாட்டுப் பாசறை – கலைஞர்
ஏழைப் பங்காளர் – கலைஞர்
சட்டமன்ற நாயகர் – கலைஞர்
பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் – கலைஞர்
நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கலைஞர்
நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்
தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர்
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர்
இத்தலைப்புகளில் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் இணைத் தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்கள் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
இக்குழுக்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
The post ’’கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் அமைச்சர்கள் தலைமையில் 12 குழு..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு first appeared on Madras Murasu.
]]>The post “அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப்பட்ட ஒரு கூட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>“தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்து காரணமாக ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்க நேர்ந்தது. அன்று நடைபெறுவதாக இருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அதனைத்தான் மனிதநேய மாண்பாளரான தலைவர் கலைஞர் அவர்களும் விரும்பியிருப்பார்.
தலைவர் கலைஞரைக் கொண்டாட வேண்டியது, அவரது புகழைப் பரப்ப வேண்டியது நம்முடைய கடமை. அதனால்தான் நாம் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை கொண்டாட இருக்கிறோம்.
95 வயது வரை வாழ்ந்த நம்முடைய தலைவர் கலைஞர், இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இதே மேடையில் விழா நாயகராக நடுநாயகமாக அவரே அமர்ந்திருப்பார். முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார். நம்மை விட்டுப் பிரிந்தார். பிரிந்தார் என்று சொல்வதை விட, நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல எங்கும் நிறைந்திருந்து, தலைவர் கலைஞர் நம்மை கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் – எந்த திட்டங்களைத் தீட்டினாலும் எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும் – எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும் தலைவர் கலைஞர் எங்கும் நிறைந்திருந்து கண்காணிக்கிறார் என்ற எண்ணத்தோடுதான் நான் நாள்தோறும் அவரது நினைவுகளைத் தாங்கி இருக்கிறேன். அந்த நினைவுகளின் காரணமாகத்தான் அண்ணனின் அருகில் அவர் துயில் கொண்டிருக்கும் கடற்கரைக்கு அடிக்கடி சென்று அவரது நினைவகத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறேன்.

இந்த மேடையில் தலைவர் கலைஞர் அமர்ந்திருப்பதாகவே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்மைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் – இனமானப் பேராசிரியர் பெருந்தகை – நம்மை நாள்தோறும் இயக்கும் உணர்வுகள்!
அந்த உணர்வுகள்தான், அவர்களது மறைவுக்குப் பிறகும் நமக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன! அந்த வகையில், எங்களின் உணர்வே! எங்களின் உயிரே! எங்களின் எழுச்சியே! எங்களின் வழிகாட்டியே! எங்களின் கலங்கரை விளக்கமே! எங்களின் உதயசூரியனே! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே! உங்களின் 100-ஆவது பிறந்தநாளை நாங்கள் கொண்டாடத் தொடங்குகிறோம்!
நீங்கள் எப்போதும் உடன்பிறப்புகளுக்கிடையேதான் இருப்பீர்கள்! இதோ, உங்களது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கிடையேதான் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் எப்போதும் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் என அனைவரும் சூழ்ந்திருக்கத்தான் உங்களது பிறந்தநாளை நீங்கள் கொண்டாடுவது வழக்கம்! இதோ, உங்களது கழகத் தளகர்த்தர்களுக்கிடையே நூற்றாண்டு விழாவை நாங்கள் தொடங்குகிறோம்!
நீங்கள் எப்போதும் தோழமைக் கட்சித் தலைவர்களைத் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டுதான் வலம் வருவீர்கள்! இதோ இந்த மேடையில் நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா உள்ளிட்ட தோழமை இயக்கங்களின் தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டுதான் உங்களது நூற்றாண்டு விழாவை நாங்கள் இன்றைக்கு தொடங்குகிறோம்!1
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே, அதே, வடசென்னையில் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
கழகத்துக்கு என அறிவகம் உருவானதே, அதே, வடசென்னையில்தான் உங்களது நூற்றாண்டு விழா தொடங்குகிறது!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் எடுக்கிறோம் என்று சொன்னால் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களும் பொருத்தமானவைதான் என்றாலும் கழகம் தோன்றிய வடசென்னைப் பகுதியில் நாம் இந்த நூற்றாண்டு விழாவைத் தொடங்குவது மிக மிக சிறப்பானது.
ஓராண்டு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை – அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக தலைவர் கலைஞருக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பதல்ல; நாம் – நம் நன்றியின் அடையாளமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்! “நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை” என்று சொன்னவர் கலைஞர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாகத்தான் இருக்கும்! திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது ‘முரசொலி’ இதழில் தலைவர் கலைஞர், “ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது” என்று எழுதினார்!
ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், பேரறிஞர் அண்ணா! ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்களுடைய ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சி!
வேல்முருகன் பேசும்போது மிகப்பெரிய பட்டியல் போட்டாரே!
குடிசை மாற்று வாரியம்,
ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம்,
தொழுநோயாளிகள் இல்லம்,
பிச்சைக்காரர் மறுவாழ்வு மையங்கள்,
ஏழைகளுக்குக் கண்ணொளி திட்டம்,
கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு நிதி,
தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல்,
வேளாண் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம்,
நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம்,
வேளாண் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம்,
கை ரிக்ஷாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் அற்புதமான திட்டம்,
ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டமும், அவர்களுக்கான தொழிற்சாலைகள் அமைத்தது,
மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து அந்தச் சொல்லுக்குச் சட்ட அங்கீகாரம் தந்தவர் கலைஞர்!
இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கலைஞர்!
ஏழை – நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கினார்,
ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தார்,
குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தார்,
மாணவர்க்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கியது கலைஞர்!
அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கியதும் கலைஞர்!
அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது கலைஞர்!
உழவர் சந்தைகள் திறந்ததும் கலைஞர்!
சமத்துவபுரங்கள் உருவாக்கியதும் கலைஞர்! – இப்படி நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்!
அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாகத் தமிழ்நாட்டு ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர்!
இந்த மேடையில் இருக்கும் அனைத்துத் தோழமை இயக்கங்களுக்குமான வழிகாட்டி அவர்! அதனால்தான், அவரது புகழைப் போற்ற அனைத்து தலைவர்களும் இங்கே ஒருசேர வந்திருக்கிறார்கள்.
தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் – ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஒரு கருத்தியலின் தலைவராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார். கடந்தகாலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் தலைவர் கலைஞர்.
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டோடு நாம் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றால், அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவரும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – இன உரிமை – மொழிப்பற்று – மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடுதான் திராவிடக் கோட்பாடு!

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்றைக்கு சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம்! எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு! கல்லூரிக் கல்வியை அடைய முடியாதவர்க்கு கல்லூரிக் கல்வியைக் கொடு! ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து! வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தா! ஆணுக்கு நிகர் பெண்! பெண்களுக்குப் பொருளாதார விடுதலையை வழங்கு! பெருந்தொழில்களை மட்டுமல்ல, சிறுதொழில்களையும் வளர்த்தெடு! நகர்ப்புறப் பகுதிகளோடு கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும்! அனைத்துத் தொழில்களும் சிறக்க வேண்டும்! அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்! மாநிலத்தின் வளம் என்பது, மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியால் தெரிய வேண்டும்! – இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
இதுதான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனாவாதி அல்ல நான். ஆனால் திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். அந்தத் தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் என்னுள் விதைத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். நான் அவரது கொள்கை வாரிசு.
எனவே, பேரறிஞர் அண்ணா போட்டுத் தந்த பாதையில், கலைஞர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் மூலமாக கடந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த பயனை நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நான் பார்க்கிறேன்.
கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. உருகாத உடன்பிறப்புகளில்லை.
இப்படி ஊர் தோறும் – நகர் தோறும் – கிராமம் தோறும் விழா எடுக்கத் தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும்.
அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை – கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றைத் திறந்து வைக்க இருக்கிறோம். ஆகஸ்ட் 7-ஆம் நாள் அன்று சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்புவிழா காண இருக்கிறது.
தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய தலைவர் கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட இருக்கின்றன.
இதற்கிடையேதான் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும் இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் – மாறுபாடுகளை மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
அறிவாலயத்தில் இருந்து இந்தக் கூட்டத்திற்கு நான் புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தபோது, பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வருகிற 23-ஆம் தேதி – தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் பிகார் மாநிலத்திற்கு வரவேண்டும். அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்களே, தமிழ்நாட்டில் எவ்வாறு ஒரு ஜனநாயக ஆட்சி உருவாகுவதற்கு ஒரு கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு, ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல, தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களிடமும் வலியுறுத்தி வருகிறேன்.
மதவாத – பாசிசவாத – எதேச்சாதிகார பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்றுசேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
பிரிவினைகளால் பா.ஜ.க. வெல்லப் பார்க்கும். சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலமாக வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள் – மாநிலக் கட்சித் தலைவர்கள் மாநிலங்களின் முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது. எத்தகைய பொய்யையும் சொல்ல பா.ஜ.க.வினர் தயங்க மாட்டார்கள். அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் பா.ஜ.க.விடம் ஏவலுக்கு கீழ்ப்படியவும் சிந்தனையற்ற – வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.
அதற்குத் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்குக் கவலை இல்லை. மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
ஒற்றுமையின் மீது, சகோதரத்துவத்தின் மீது, மதச்சார்பின்மையின் மீது, உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள – மக்கள், நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! எனவே, நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம்.
“நீ, நான் என்றால் உதடு ஒட்டாது; நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அடிக்கடி சொல்வார். அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயகத் திருவிழாவையும் நாம் கொண்டாடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல – நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, இந்த விழாவில் உறுதி எடுப்போம்! சபதம் ஏற்போம்!
அதுதான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும், பெருமை சேர்க்கும் என்பதை எடுத்துச் சொல்லி, தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் வாழ்க! நம்மை ஆளாக்கிய திராவிடப் போராளி கலைஞர் புகழ் வாழ்க! வாழ்க! என்று சொல்லி விடைபெறுகிறேன் நன்றி! வணக்கம்!”
The post “அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப்பட்ட ஒரு கூட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.
]]>The post ’’கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கம் – டாக்டர் ராமதாஸ் பகிர்ந்த புகைப்படம்..!’’ first appeared on Madras Murasu.
]]>இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இரு படங்களையும் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
தமிழ்மொழி வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்குடன் மூன்றாவது மொழிப்போர் நடத்துவதென நான் நிறுவிய தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தீர்மானம் செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக 26.03.2005 அன்று திருச்சி பொன்மலைத் திடலில் மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த மாநாட்டுக்காக 22.03.2005 அன்று சென்னையிலிருந்து எனது தலைமையில் திருச்சிக்கு தமிழ்ப் பாதுகாப்பு ஊர்திப் பயணம் புறப்பட்டது. எனது பயணத்தை தொடங்கி வைப்பதற்காக பூந்தமல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது நண்பரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சிக்கு வந்த அவரை நான் கைப்பிடித்து அழைத்து வந்த காட்சி இது. கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள நேரத்தில் இதை பகிர்வதில் நான் மகிழ்கிறேன்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
The post ’’கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கம் – டாக்டர் ராமதாஸ் பகிர்ந்த புகைப்படம்..!’’ first appeared on Madras Murasu.
]]>The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>சாணக்கியனும் சாவர்க்கரும் அரசதிகாரத்தின் வீறுகொண்ட வடிவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இக்காலத்தில் சனாதனத்திற்கும் வர்ணக்
கோட்பாட்டிற்கும் எதிரான கலைஞரின் பங்களிப்பு தமிழகத்தின் சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள்.
புகழ் வணக்கம்.
#கலைஞர்100
The post “சமூக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் கலைஞர்..!” சு.வெங்கடேசன் first appeared on Madras Murasu.
]]>The post ’’பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு..!’’ தீக்கதிர் தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>நவீன தமிழக அரசியல் வரலாற்றை கலைஞரை தவிர்த்துவிட்டு யாரும் எழுதி விட முடியாது. பன்முகத் திறன் கொண்ட அவர் கலைத்துறையிலும், இலக்கியத்துறையிலும், இதழியல் துறையிலும், நிர்வாகத்துறையிலும் அழுத்தமான முத்திரைகளை பதித்துள்ளார்.
1969இல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றியுள்ளார். 1957ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேர வைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தாம் போட்டி யிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
அவசர நிலைக் காலத்தின் போது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு அவர் உறுதியாக பணியாற்றியது என்றென்றும் நினைவு கூரப்படும். அதேபோன்று மாநில உரிமைகளுக்காகவும், மாநில சுயாட்சிக் காகவும் அவர் அயர்வின்றி களமாடியுள்ளார்.
பெரியார் நினைவு சமத்துவபுரம், வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவ ருக்கு சிலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததிய அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை என அவரது தனித்த சாதனைகள் என்றென்றும் தமிழக மக்களால் நினைவு கூரப்படும்.
இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்த அவர், தனது இறுதிக் காலம் வரை பொது வாழ்வில் பணியாற்றியதன் மூலம் நீண்ட நெடிய பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.
தன்னுடைய துடிப்புமிக்க வசனங்களின் மூலம் தமிழ் திரையுலக வரலாற்றில் தனித்தடம் பதித்தவர் அவர். இளம் வயதிலேயே முரசொலி ஏட்டை துவக்கி நடத்திய அவர் இந்தியஅளவில் ஒரு முன்னுதாரணமான ஊடகவியலாளராக விளங்கினார். இலக்கியத்துறையிலும் அவருடைய பங்களிப்பு அசாத்தியமான ஒன்று.
தீக்கதிர் நாளேட்டின் முதன்மையான வாசகர்களில் ஒருவராக விளங்கிய அவர், தீக்கதிர் சுட்டிக்காட்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். தீக்கதிர் வெளியிட்ட பெரும்பாலான மலர்களுக்கு வாழ்த்துரைவழங்கியுள்ளார்.
மதவெறி சக்திகளுக்கு எதிரான விரிந்து பரந்த களத்தையும், ஒற்றுமையையும் கட்ட வேண்டிய இன்றைய சூழலில் அவர் முன்வைத்த பகுத்தறிவும், சுயமரியாதைக் கருத்துக்களும், மாநில உரிமை முழக்கங்களும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் ஜனநாயக சக்திகளுக்கு வலுவூட்டக்கூடியதாக அமைந்துள்ளன. தமிழக அரசியலையும் தாண்டி இந்திய அளவில் மதிக்கத்தக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவரது நூற்றாண்டு மதச்சார்பற்ற அரசியல் களத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையட்டும்.
The post ’’பன்முகத் திறன் கொண்ட கலைஞரின் நூற்றாண்டு..!’’ தீக்கதிர் தலையங்கம் first appeared on Madras Murasu.
]]>