Madras Murasu

தமிழ்நாட்டில் அசாம் ஊடக செய்தி ஆசிரியர்கள் சுற்றுலா கலாச்சார சிறப்புகள் கண்டு மகிழ்ச்சி

அசாம் மாநிலத்தின் முன்னணி ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 11 செய்தி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் ஊடகச் சுற்றுலாவை குவஹாத்தி பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. 2026 ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலான இந்த பயணத்தின் மூலம், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், மாநிலத்தின் கலாச்சார சிறப்புகள், நிறுவன ரீதியிலான முயற்சிகளை ஊடகப் பிரதிநிதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும். குவஹாத்தி பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் பாவனி குப்தா தலைமையில் இந்த ஊடகக் குழுவினர் வருகை தந்துள்ளனர்.

இப்பயணத்தின் முதல் நாளான இன்று (18.08.26) இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்குச் இக்குழுவினர் சென்றனர். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடி கடல்சார் கல்வி, துறைசார் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். ஆகஸ்ட் 19 அன்று சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி மையத்திற்குச் சென்று கட்டமைப்புப் பொறியியல், கட்டுமானப் பொருட்கள் வடிவமைப்பு சார்ந்த ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து முட்டுக்காட்டில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்திற்குச் சென்று உவர்நீர் வாழ்விட மீன்வளர்ப்பு முறைகள், நவீன புத்தாக்கங்கள் பற்றியும் கேட்டறிகின்றனர். அத்துடன் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் சென்று அச்சமூக மக்களின் பாரம்பரிய அறிவாற்றல், பாம்புகள் பாதுகாப்பு மேலாண்மை செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

ஆகஸ்ட் 21 அன்று மஹிந்திரா ஆராய்ச்சி பூங்காவை பார்வையிட்டு கலந்துரையாடும் இக்குழுவினர், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களுக்கும் சென்று இப்பிராந்தியத்தின் வளமான கலாச்சார, வரலாற்று, கட்டடக்கலைப் பாரம்பரியங்களை நேரில் பார்வையிடுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் வளர்ச்சிப் பணிகளைப் ஊடகவியலாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆவணப்படுத்துவதன் மூலம் பிராந்திய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில் குவஹாத்தி பத்திரிகை தகவல் அலுவலகம் இந்த ஊடகச் சுற்றுலாவை முன்னெடுத்துள்ளது. நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கலாச்சாரத் தலங்கள், சமுதாய முயற்சிகள் பற்றிய தகவலறிந்து பொறுப்புணர்வுடன் கூடிய ஊடகச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க இந்த நேரடிப் பயணம் வழிவகுக்கும்.

The Press Information Bureau (PIB), Guwahati has organised a five-day media tour to Tamil Nadu from August 18 to 22, 2026 for a delegation of 11 editors representing prominent media organisations in Assam. The tour aims to provide the participating media professionals with first-hand exposure to significant research, developmental, cultural and institutional initiatives in Tamil Nadu. The delegation comprises editors and senior media representatives from Niyomiya Barta, Dainik Asom, Dainik Agradoot, Purvanchal Prahari, Dainik Gana Adhikar, Prag News, Northeast Live, News18 Assam, ND24, Assam Talks and DY365. The delegation is being led by Smt. Pavni Gupta, IIS, Joint Director, PIB Guwahati.

Scroll to Top