கத்திரி வெயில் முடிந்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வெயில் தாக்கம் குறையாததால் அந்த தேதியில் பள்ளியை திறக்க கூடாது என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வெளியானது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு பள்ளி திறப்பு தேதியை மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை மட்டும் ஜுன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.