இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடந்தது. அதன் ரிசல்ட் இன்று வெளியானது. அதாவது முன்றே நாளில் பல லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது விஐடி.
தேர்வு முடிவுகள், ரேங்க் விபரங்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம் அமராவதி, மத்தியபிரதேசம் போபால் ஆகிய இடங்களில் உள்ள விஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவை அனைத்தும் ஆன்லைன் முறையில் நடக்கும்.
நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் ஒரு லட்சத்திற்குள் ரேங்க் எடுத்தவர்கள் மட்டுமே வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அதன் வளாகங்களில் படிக்க நடத்தப்படும் கவுன்சலிங் எனப்படும் சேர்க்கைக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பிடெக் நுழைவுத்தேர்வு ரிசல்ட், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் https://vit.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளுக்கான விபரங்களும் இந்த தளத்தில் உள்ளன.