இந்திய பெண்கள் அணிக்கான கூடைப்பந்து பயிற்சி மையத்தினை வாரணாசிக்கு மாற்றி சமீபத்தில் ஒன்றிய விளையாட்டு துறை அறிவித்திருந்தது.
அறிவிப்பு வெளியான பிறகு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், உடனடியாக தலையிட்டு கடிதம் ஒன்றினை எழுதினார். இதனையடுத்து வாலிபர் சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் உடனடியாக போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின்னணியில் வருகிற 7 ஆம் தேதி மயிலாடுதுறையை சுற்றியுள்ள மாவட்டங்களை திரட்டி கண்டன பேரணி பொதுக்கூட்டத்தினை நடத்துவதாக அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையம் வாரணாசிக்கு மாற்றப்பட்ட பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறையில் செயல்படும் என அறிவிப்பினை மாற்றி வெளியிட்டுள்ளது.
இது வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. இந்தக் கோரிக்கையை உடனடியாக முன்னெடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட தொடர்ந்து முன்னின்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டின் உரிமைகளில் எது ஒன்றை பறித்தாலும் அதற்கு எதிராய் ஒன்றிணைந்து இன்னும் வேகமாய் போராடுவோம்.

