இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“என் நண்பர் பில் கேட்ஸின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. மனதின் குரல் நமது கிரகத்தை சிறப்பாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் கூட்டு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது, திரு. கேட்ஸும் இதில் ஆர்வமாக உள்ளார். நீடித்த வளர்ச்சி இலக்குகளின் வலுவான ஒத்திசைவு ஆய்வில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது@ by @BMGFIndia.”
பிரதமர் மோடியின் மனதின் குரல் 100 வது அத்தியாயம் குறித்த செய்தி, ‘’மின்ட்’’ என்ற ஆங்கில இதழில் வந்துள்ளதை சுட்டிக் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை, ஏராளமானோர் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

