இளைஞர் நலம். மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கையிl, “சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், கழக அயலக அணியின் முன்னெடுப்பில், DMK Youth Wing அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700 தமிழ் மொழிப்பாட நூல்களை ரூ.79,250-க்கு வாங்கினோம்.
அவற்றை, சவுதியில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் வண்ணம் அயலக அணி நிர்வாகிகளிடம் இன்று ஒப்படைத்தோம். மாணவர்களுக்கு வாழ்த்துகள் – திக்கெட்டும் தமிழ் பரவட்டும்” என்று கூறியுள்ளார்.

