வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
‘’மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தி உள்ளார்கள்.
இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, மாணவ, மாணவியர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான
சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில்
கேட்டுக்கொள்கிறேன். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய்
வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க
வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

